ETV Bharat / state

தமிழக காங்கிரஸ் கமிட்டியில் உட்கட்சி மோதல்: நடப்பது என்ன? - இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கம்

தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தற்பொழுது உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மீது புகார் அளிக்க கே.எஸ் அழகிரி திட்டமிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியில் உட்கட்சி மோதல்: நடப்பது என்ன?

author img

By

Published : Dec 28, 2022, 10:33 PM IST

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தற்பொழுது உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி பங்கேற்கக் கூடிய நிகழ்ச்சிகளைத் தொடர்ச்சியாகத் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசு, தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரும் அவர்களது ஆதரவாளர்களும் புறக்கணித்து வருகின்றனர்.

ஏற்கனவே சென்னை கலைவாணர் அரங்கத்தில், மாமனிதர் நேரு நூல் வெளியீட்டு விழாவில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்ற விழாவை மூத்த தலைவர்கள் புறக்கணித்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்றும் இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் 138-வது துவக்க விழா மற்றும் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கக்கன் சிலை திறப்பு சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கான அழைப்பிதழில் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசு, ஈவிகேஎஸ் இளங்கோவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இடம் பெற்றுள்ளது. இருந்த போதிலும் மேலே குறிப்பிட்ட தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இது தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ச்சியாக மூத்த தலைவர்களின் புறக்கணிப்பை மேலிடத்திற்கு கே.எஸ் அழகிரி புகாராக அனுப்பத் திட்டமிட்டுள்ளதாகக் காங்கிரஸ் வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாகச் செய்தியாளர் சந்திப்பில் கே.எஸ் அழகிரியிடம் கேட்ட பொழுது, காங்கிரஸின் மூத்த தலைவர்கள் யாரும் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணிக்கவில்லை, அவரவர்களுக்குத் தனிப்பட்ட வேலை இருக்கிறது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: TRB: 15,149 பணியிடங்கள்.. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.