ETV Bharat / state

வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியா? : கே.எஸ் அழகிரி பதில் - ks alagiri latest press meet

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தான் இருக்கும், தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் தேதி அறிவித்த பின்னர் ஆலோசனை நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியா? : கே.எஸ் அழகிரி பதில்

author img

By

Published : Dec 9, 2021, 7:34 AM IST

சென்னை: சோனியா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராட்சச பலூனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி பறக்க விட்டார். இதில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸின் ஆதரவு காரணம்

பிறகு செய்தியாளர்களை அவர்,"கடந்த 10 ஆண்டுகளில் அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட பல திட்டங்கள் சோனியாகாந்தி மூலம் துவக்கப் பட்டது, விவசாயிகள் போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் காங்கிரஸின் ஆதரவு அதற்கு முக்கியம். விவசாயிகள் காந்திய வழியில் போராடி மகத்தான வெற்றியைப் பெற்று இருக்கிறார்கள், இந்திய விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பெருமை சேர்க்க கூடியது இந்த போராட்டம்" என்றார்.

திமுக கூட்டணி தொடரும்
வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தான் இருக்கும், தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் தேதி அறிவித்த பின்னர் பேசப்படும் என தெரிவித்தார்.

அமித்ஷா பதிலளிக்க வேண்டும்
’நாகாலாந்தில் 13 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் அமித்ஷா முழுமையான காரணத்தை தெரிவிக்காமல் மேம்போக்காக பேசியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரசை புறக்கணித்தது முதுகில் குத்தும் செயலாகும் என்றும் அவர் தெரிவித்தார்

திமுக சிறப்பாக செயல்படுகிறது

’திமுக ஆட்சி ஆறு மாத காலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வெளிப்படையான நிர்வாகம் நடைபெற்று வருகிறது. பெட்ரோல் விலையை மூன்று ரூபாய் குறைத்த முதல் மாநிலம் தமிழ்நாடு என்றார்

ரஜினிகாந்த் - சசிகலா சந்திப்பு
'நடிகர் ரஜினிகாந்த் எல்லோரையும் சந்தித்து வருகிறார், அந்த வகையில்தான் சசிகலாவும் அவர்களை சந்திக்கச் சென்று இருக்கலாம். அதிமுகவில் எதற்கு யார் காரணமோ அவர்களை விட்டுவிட்டு காரணமில்லாதவர்களை விமர்சிப்பது தான் அதிமுகவில் பலவீனம்',.என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:மின்சார திருத்தச்சட்டம் முன்வடிவு: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.