தமிழ்நாடு அரசின் நிதித்துறை செயலராக ஐஏஎஸ் அலுவலர் கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக நிதித்துறை செயலராக இருந்த கே. சண்முகம் தலைமை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளதால், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலராக இருந்த கிருஷ்ணன் நிதித்துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.
கிருஷ்ணன் வகித்து வந்த பொறுப்புகளை இனி சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலாளர் ராஜேஷ் லக்கானி கூடுதலாக கவனிப்பார் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.