ETV Bharat / state

56 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு..!

56 வருடங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் கோவிலில் இருந்து திருடப்பட்ட நடனமாடும் கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

56 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

author img

By

Published : Dec 8, 2022, 12:42 PM IST

சென்னை: ராமேஸ்வரம் வட்டம் தங்கச்சி மடம் கிராமத்தில் உள்ள ஏகாந்த ராமசாமி கோயிலில் இருந்த பழமையான கிருஷ்ணர் சிலை உட்பட ஆறு சிலைகள் கடந்த 1966ஆம் ஆண்டு திருடப்பட்டு விட்டதாக கோயிலின் பொறுப்பாளர் நாராயணி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட சிலைகளின் புகைப்படத்தை பாண்டிச்சேரியில் உள்ள இந்தோ பிரென்ச் நிறுவனத்திடம் இருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பெற்றனர். ஏகாந்த ராமசாமி கோவிலில் கந்தர்வ கிருஷ்ணா, விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி, விஷ்ணு உட்பட ஆறு சிலைகள் காணாமல் போய் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து பெறப்பட்ட சிலைகளின் புகைப்படத்தை அடிப்படையாக வைத்து உலகில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களின் இணையதளங்களை சோதனை செய்தனர். அப்போது அமெரிக்காவில் உள்ள இந்தியானா போலீஸ் என்ற அருங்காட்சியகத்தில் நடனமாடும் கிருஷ்ணர் சிலை இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

1966ஆம் ஆண்டு ஏகாந்த ராமசாமி கோயிலில் இருந்து நடனமாடும் கிருஷ்ணர் சிலை திருடப்பட்டு அமெரிக்காவில் உள்ள இந்தியானா போலீஸ் என்ற அருங்காட்சியகத்திற்கு விற்கப்பட்டது தெரிய வந்தது. 1200 - 1350ஆம் காலகட்டத்தில் நடனமாடும் கிருஷ்ணர் சிலை உருவாக்கபட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட நடனமாடும் கிருஷ்ணர் சிலையை உடனடியாக மீட்டு வரும் முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மீதமுள்ள ஐந்து சிலைகளை மீட்பதற்கான முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். விரைவாக செயல்பட்டு சிலையைக் கண்டுபிடித்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு டிஜிட்டல் பதக்கம் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: சீல் வைக்கப்பட்ட புரதான கட்டடங்களின் சீல்களை அகற்ற அனுமதி - மாநில தகவல் ஆணையர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.