ETV Bharat / state

’சூடு, சொரணை இருந்தால் முனுசாமி இப்படி எல்லாம் பேச மாட்டார்’- கோவை செல்வராஜ் - முனுசாமி

’சூடு, சொரணை இருந்தால் முனுசாமி இப்படி எல்லாம் பேச மாட்டார்’ எனவும் திமுக உதவியுடன் பெட்ரோல் பங்க் வாங்கவில்லை என முனுசாமியால் கூற முடியுமா? போன்ற பல குற்றச்சட்டுகளை கோவை செல்வராஜ், முனுசாமி மீது தெரிவித்துள்ளார்.

கோவை செல்வராஜ், முனுசாமி
கோவை செல்வராஜ், முனுசாமி
author img

By

Published : Jul 10, 2022, 1:13 PM IST

சென்னை: பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ. பன்னீர்செல்வத்தின் இல்லத்தில், அவரை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான கோவை செல்வராஜ் மற்றும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

முனுசாமி காசுக்கு அடிமை: அப்போது பேசிய கோவை செல்வராஜ், “சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி. முனுசாமி இன்று அதிமுகவிற்கு நான் புதிதாக வந்ததாகவும், பன்னீர்செல்வம் கூறி நான் பேசுவதாகவும் கூறியுள்ளார். முனுசாமி தலைவராக ஏற்றுள்ளவரை போல, தவறான கருத்தை கூறி, யாரையும் தூண்டி விடுபவர் ஓபிஎஸ் அல்ல, முனுசாமி காசுக்கு அடிமை.

1974ஆம் ஆண்டு அதிமுகவில் 14 வயதிலேயே சேர்ந்தேன். 1984ஆம் ஆண்டு ஆர்.எம். வீரப்பன் மீதான கோபத்தால காங்கிரஸ் சென்றோம், பின்னர் ஜெ. தலைமை எற்றவுடன் அதிமுக வந்தோம். நான் யாரையும் போல கொலைகாரன் அல்ல, பராசக்தி புத்தகம் வைத்திருந்தாக ஓ. பன்னீர்செல்வம் கூறியது 1962ஆம் ஆண்டு, அப்போது அதிமுக இல்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “திமுகவின் துரைமுருகன் வெற்றிக்கு வீரமணியும், முனுசாமியும் தான் காரணம், அதற்கு ஆதாரம் எனக்கு இருக்கிறது. தேவைப்படும்போது அதை வெளியிடுவேன். கேபி முனுசாமி ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை என்றால் உன்னுடைய அயோக்கிய தனத்தை வெளிப்படுத்துவேன், உன்னைப்போல் கோமாளி அல்ல நான். கிருஷ்ணமூர்த்தியிடம் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சீட் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றினார். திமுக உதவியுடன் பெட்ரோல் பங்க் வாங்கவில்லை என முனுசாமியால் கூற முடியுமா..?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், “முனுசாமி பொதுவாழ்க்கை வாழ தகுதி இல்லாதவர். அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கி, ராஜ்ய சபா வாய்ப்பு வழங்கியது ஒபிஎஸ் தான். சட்டப்பேரவை தேர்தலில்தான் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு வழங்கினார். ரோசம், மானம், சூடு, சொரணை இருந்தால் முனுசாமி இப்படி எல்லாம் பேச மாட்டார்” என்றார்.

ஆடியோ ஆதாரம்: இதையடுத்து பேசிய வட சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, “தொண்டர்களின் ரத்தத்தை உறிஞ்சியவர் முனுசாமி. என்னிடம் முனுசாமியின் ஆடியோ இருக்கிறது, தேவைப்பட்டால் வெளியிடுவேன். பன்னீர்செல்வம் பற்றி பேச அவருக்கு உரிமை , தகுதி கிடையாது. சட்டப்பேரவை உறுப்பினர் சீட்டு வாங்கித் தருவதாக என்னிடம் பணம் வாங்கி ஏமாற்றினார் முனுசாமி” என குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: 'நான்தான் ஜெயலலிதாவின் சகோதரர்...' 83 வயதில் சொத்தில் பங்கு கேட்கும் மைசூர் முதியவர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.