ETV Bharat / state

கோடநாடு வழக்கு: சயானின் ஜாமீன் நிபந்தனை தளர்வு; மாதத்தில் ஒருமுறை ஆஜரானால் போதும்

author img

By

Published : Oct 26, 2022, 10:01 PM IST

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயானின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sayan bail relaxation
Sayan bail relaxation

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவிற்குச்சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் காவலாளி ஓம் பகதூரைக் கொலை செய்துவிட்டு, பங்களாவுக்குள் இருந்த பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்துச்சென்றனர்.

இந்த கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக, சோலூர்மட்டம் காவல் நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவங்களுக்கு மூளையாகச்செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல் துறையினர் சந்தேகித்த நிலையில், கார் விபத்து ஒன்றில் கனகராஜ் உயிரிழந்தார். இந்த வழக்குத் தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி ஒவ்வொரு திங்கட்கிழமையும் விசாரணை அலுவலர் முன்பு, ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிபந்தனையை தளர்த்தக்கோரி சயான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, நிபந்தனையைத் தளர்த்த காவல் துறை தரப்பில் எதிர்ப்புத்தெரிவிக்கப்பட்டது.

சயான் தரப்பில் கேரளாவில் வசித்து வருவதால் ஒவ்வொரு வாரமும் ஊட்டிக்கு வந்து கையெழுத்திடுவது சிரமமாக இருப்பதாகத்தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை தளர்த்தி, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பரங்கிமலை மாணவி கொலை வழக்கு: கொலையாளியை ஒரு நாள் காவலில் எடுத்துவிசாரிக்க அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.