ETV Bharat / state

மழைக்கால நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி - கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் விளக்கம்!

How to protect from monsoon diseases: சுவாசித்தல், சாப்பிடுதல், பூச்சிக்கடி, கொசுக்கள், ஒட்டுண்ணிகள் போன்றவற்றைக் கவனமாகக் கையாள்வதன் மூலம் மழைக்கால நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம் என கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் விளக்கம் கொடுத்துள்ளார்.

kilpauk-medical-college-professor-parantham-explained-about-protection-from-monsoon-diseases
கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் விளக்கம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 9:08 PM IST

Updated : Dec 8, 2023, 10:26 PM IST

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. இதன் காரணமாகத் தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீருடன் கழிவுநீரும் புகுந்து மக்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாயினர். இந்த வெள்ளநீரை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் வட பகுதியில் இந்த நிலைமை, என்றால் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் கனமழை பெய்து ஆறு, ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்த நேரத்தில் நாம் நோய்த் தொற்றுகளின்றி பாதுகாப்பாக இருப்பது முக்கியம். இந்த மழை வெள்ள காலத்தில் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவத்துறை பேராசிரியர் பரந்தாமன் ஈடிவி செய்தி நிறுவனத்திற்குச் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.

அசுத்தமான குடிநீர் பயன்படுத்துவதாலும், அசுத்தமான தண்ணீரில் நடப்பதாலும், தெருவோர உணவுகளை உட்கொள்வதால், மந்தமான காலநிலை காரணமாகவும் மழைக்காலத்தில் நோய்கள் ஏற்படுகின்றன.

மழைக்காலத்தில் நோய்கள்:

  • குடிநீரில் அசுத்தமான நீர் கலந்து நாம் அதைக் குடிக்கும் போது பேதி, வாந்தி, காலரா, மஞ்சள் காமாலை, ஹெபடைடிஸ் ஏ வைரஸ், டைபாய்டு, எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
  • அசுத்தமான நீரில் தயாரிக்கப்பட்ட உணவினால் பேதி, வாந்தி மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
  • தேங்கிய கழிவு நீரில் நடப்பதால் சேற்றுப்புண், தோல் அலர்ஜி, சொறி சிரங்கு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
  • மந்தமான காலநிலையால் காய்ச்சல் போன்றவை ஏற்படுகின்றன.
  • தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
  • மழைக்காலத்தில் பூச்சி, தேள், வண்டு, பாம்பு, பூரான், அட்டைப் பூச்சி போன்றவற்றின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதனால் அலர்ஜி, வலி போன்றவை ஏற்படலாம்.
  • அசுத்தமான நீரைப் பருகுவதால் அமீபியாக்சிஸ், வயிற்றுப்பூச்சிகள் தொல்லை போன்றவை ஏற்படும்.

இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்:

  • சுத்தமான தண்ணீரைக் கொதிக்க வைத்து ஆற குடிக்க வேண்டும்.
  • ஹோட்டல் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அங்குச் சுத்தமான தண்ணீரில் தான் சமைக்கப்பட்டு இருக்கிறதா என்று உறுதியாகக் கூற முடியாது ஆகையால் வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
  • வெள்ள பாதிப்பு காரணமாகக் காய்கறிகள், கீரைகள், பழங்களில் அதிகளவு கிருமிகள் தங்கியிருக்கும். கீரைகளில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும். நன்றாக வேக வைத்தாலும் கிருமிகள் நீங்காது. ஆகையினால் முடிந்த வரை கீரைகள் மற்றும் பச்சைக் காய்கறிகள் சாலட் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. தோல் நீக்கி சாப்பிடும் காய்கறிகளைச் சமைத்துச் சாப்பிடலாம்.
  • வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் வரும் போது கை மற்றும் கால்களைச் சுத்தமாகக் கழுவிய பின்னரே வீட்டிற்குள் செல்ல வேண்டும்.
  • வெள்ள பாதிப்பு மற்றும் மழை காரணமாக வீடுகள் ஈரப்பதத்துடன் இருக்கும். இதனால் கிருமிகள் அதிகம் பரவலாம். ஆகையால் கிருமிநாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்து, தரைகளை உலர்த்த வேண்டும்.
  • வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் வேண்டும். வீட்டுக் கழிவறைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
  • கட்டாயமாகக் காலணிகள் அணிந்து நடக்க வேண்டும்.
  • மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தடுக்க வேண்டும். கூட்டத்தில் யாருக்கேனும் வைரஸ் காய்ச்சல் தொற்று இருந்தால், அது மற்றவர்களையும் பாதிக்கக்கூடும். வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்வது நல்லது.
  • வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் பூச்சிகள் நடமாட்டம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • வீட்டைச் சுற்றித் தேங்கும் மழை நீரால் கொசுக்கள் வரலாம். ஆகையால் வீட்டில் கொசு வலைகளை அமைப்பது சிறந்தது.
  • சுவாசித்தல் (Inhalation), சாப்பிடுதல் (Ingestion), பூச்சிக்கடி (Insect byte), கொசுக்கள் (Injection), ஒட்டுண்ணிகள் (Infestation) போன்றவற்றின் மூலமாக நோய்கள் ஏற்படுகிறது. இவற்றைக் கவனமாகப் பார்த்துக் கொள்வதன் மூலம் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

இதையும் படிங்க: 3 நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் இருக்கிறதா? - கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறும் அறிவுரை

Last Updated : Dec 8, 2023, 10:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.