ETV Bharat / state

சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட கென்ய பெண்கள்.. டெல்லி கென்ய தூதரகத்தில் ஒப்படைத்த போலீஸ்!

சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கென்ய பெண்கள் மீட்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் டெல்லியில் உள்ள கென்ய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கென்ய பெண்கள் மீட்கப்பட்டு டெல்லி கென்ய தூதரகத்தில் ஒப்படைப்பு!

author img

By

Published : Jun 5, 2023, 12:44 PM IST

சென்னை: பாலியல் சார்ந்த புகார்கள் ஒவ்வொரு நாளும் விரல் விட்டு எண்ண முடியாத அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெரும்பாலும் இந்த பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டை சேர்ந்தவர்களாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆழ்வார்ப்பேட்டை பகுதியின் சி.வி.ராமன் சாலையில் ராஜ் இன் என்ற பெயரில் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக தொடர்ந்து காவல்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. மேலும், அந்த விடுதியில் கென்யா நாட்டை சேர்ந்த நான்கு பெண்கள் மே மாத துவக்கத்தில் இருந்து, இரண்டு அறைகளை அந்த விடுதியில் எடுத்து அதில் தங்கி வந்து உள்ளனர்.

இதையும் படிங்க: உடலுறவின் போது டார்சர் செய்த கணவர்.. நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி.. கடலூரில் நிகழ்ந்த பகீர் சம்பவம்!

இதையடுத்து, கடந்த மாதம் மே 28-ஆம் தேதி சோதனைக்காக விடுதிக்கு சென்ற மயிலாப்பூர் போலீசார் கென்யா நாட்டுப் பெண்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த விசாரணையில், கென்யா நாட்டை சேர்ந்த நான்கு பெண்களை வைத்து லாட்ஜில் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து லாட்ஜில் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய ஆபாச பொம்மைகளை கைப்பற்றிய போலீசார், லாட்ஜின் உரிமையாளர் சரவணராஜ் (வயது 43), சேலத்தை சேர்ந்த பராமரிப்பாளர் கண்ணன் (வயது 40) ஆகிய இருவரையும் இந்த குற்ற செயலில் ஈடுபட்டதற்காக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மெரினாவில் காதல் ஜோடியிடம் அத்துமீறல்..ரவுடிகளை துணிச்சலுடன் எதிர்கொண்ட பெண் காவலர் கலா!

மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கென்யா நாட்டை சேர்ந்த அந்த நான்கு இளம் பெண்களை போலீசார் மீட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி மயிலாப்பூர் அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் காப்பகத்தில் இருந்த கென்யா நாட்டு 4 பெண்களையும் நீதிமன்ற உத்தரவின் படி போலீசார் டெல்லியில் உள்ள கென்ய தூதரகத்தில் ஒப்படைக்க, நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில் டெல்லி அழைத்து சென்றுச் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் உள்ளாடைக்குள் வைத்து 2 கிலோ தங்கம் கடத்தியவர்.. போலீசாரிடம் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.