சென்னை, ராயபுரம் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தின் முன்பு சென்னை செங்கை மீன்பிடி தொழிற்சங்கத்தின் சார்பாக மீனவர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மீனவர்களின் நலவாரியத்திற்கான தனி அலுவலகத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 50க்கும் மேற்பட்ட மீனவப் பெண்கள் உள்பட பலர் இணைந்து மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு கோஷங்கள் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கோரிக்கை மனுவை மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலர்களிடம் அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொதுச் செயலாளர் லோகநாதன், “மீனவர்களுக்காக நலவாரியம் அமைப்பதாகக் கூறி அதற்காக இரண்டு நாள்கள் மட்டும் முகாம் அமைத்து நலவாரியத்தில் ஆட்களை சேர்த்தனர்.
ஆனால், கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு மட்டும் நல வாரியத்தில் அனுமதி என்பதையும் மாற்றி, மீன் தொழிலில் ஈடுபடும் அனைவருக்கும் நலவாரியம் அமைத்திட வேண்டும். மீனவர் நல வாரியத்திற்கு என தனி அலுவலகம் அமைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...உயிர் பறிக்கும் கடன் செயலிகள்!