ETV Bharat / state

திருநங்கை நலீனாவுக்கு கனிமொழி வாழ்த்து! - கனிமொழி

சென்னை: லயோலா கல்லூரி மாணவர் தேர்தலில் போட்டியிட்டு துணைச் செயலாளராக வெற்றிபெற்றுள்ள நலீனா பிரஷீதாவிற்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கனிமொழி
author img

By

Published : Jun 24, 2019, 3:40 PM IST

சென்னை லயோலா கல்லூரியில் பயின்றுவரும் நலீனா பிரஷீதா என்கிற திருநங்கை, சமீபத்தில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு துணைச் செயலாளராக வெற்றிபெற்றுள்ளார்.

லயோலா கல்லூரி வரலாற்றிலேயே ஒரு திருநங்கை தேர்தலில் வெற்றிபெறுவது இதுவே முதல் முறை என்பதால், அவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

கனிமொழி ட்வீட்
கனிமொழி ட்வீட்

அந்த வகையில் திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் திருநங்கை சகோதரி நலீனா பிரஷீதா வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி. நலீனா இன்னும் பல வெற்றிகளை பெற்று மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்” என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Intro:Body:

kanimozhi tweet


Conclusion:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.