ETV Bharat / state

'மக்கள் எழுச்சி முன் எந்த ஏமாற்று வேலைகளும் எடுபடாது' - தூத்துக்குடி சம்பவத்துக்கு கனிமொழி எம்.பி., ட்வீட் - kanimozhi mp slams tn govt thoothududi gun shoot

தூத்துக்குடி: துப்பாக்கிச் சூட்டில் சிந்திய ரத்தத்துக்கான நீதி கிடைத்திருக்கிறதா ? இல்லை. மக்கள் எழுச்சியின் முன் எந்த ஏமாற்று வேலைகளும் எடுபடாது என்பதை இந்த அரசுக்கு உணர்த்திட நாம் உறுதியேற்போம் என ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி ட்விட்டரில் கனிமொழி எம்.பி., பதிவிட்டுள்ளார்.

கனிமொழி எம்.பி. ட்வீட்
கனிமொழி எம்.பி. ட்வீட்
author img

By

Published : May 22, 2020, 1:09 PM IST

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. அப்போது, காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில், சிறுமிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் முடிந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. மேலும், கரோனா நோய்த் தொற்று காரணமாக துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கூடாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாவட்டத்தல் 1000 காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கனிமொழி எம்.பி. ட்வீட்
கனிமொழி எம்.பி. ட்வீட்

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கனிமொழி எம்.பி., பதிவிட்ட ட்விட்டரில், "ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. 'கலவரத்தைக் கட்டுப்படுத்த' எனும் பொய்யைக் கட்டவிழ்த்து, போராடிய மக்களின் உயிர்குடித்தது அரசு பயங்கரவாதம்.

துப்பாக்கிச் சூட்டில் சிந்திய இரத்தத்துக்கான நீதி கிடைத்திருக்கிறதா ? இல்லை. மக்கள் எழுச்சியின் முன் எந்த ஏமாற்று வேலைகளும் எடுபடாது என்பதை இந்த அரசுக்கு உணர்த்திட நாம் உறுதியேற்போம். தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம்" இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு - பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.