சென்னை மேற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில், ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட டிரஸ்ட்புரம் 6வது தெரு பகுதியில் திமுக உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நடைபெற்றது. இதில் திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்நிகழ்வில், சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் நே.சிற்றரசு, மாநில மகளிரணி துணைச்செயலாளர் குமரி விஜயகுமார், சென்னை மேற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராணி ரவிச்சந்திரன், சென்னை மேற்கு மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கே.மலர் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி கூறுகையில், ''தேர்தலில் யார் வாக்கு பெறுகிறார்கள் என்பது தான் முக்கியம். அவர் தான் உண்மையான முதலமைச்சர் வேட்பாளர். கரோனா காலத்தில் மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். முதலமைச்சர் வேட்பாளருக்கான போட்டி இல்லையென்றாலும் கூட, இது நல்ல அரசு கிடையாது.
ஹத்ராஸ் விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசு சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தான் அரசியல் கட்சியினர் தலையீடுகின்றனர். மக்கள் மீது அக்கறை கொண்டுள்ள பிரதமர் மோடி, இந்த விவகாரம் பற்றி இதுவரை பேசவில்லை'' என்றார்.
இதையும் படிங்க: சடன் பிரேக் போட்ட ஓட்டுநர்… வடிவேல் போல் பறந்த நடத்துநர்!