ETV Bharat / state

காஞ்சி ஏகாம்பர நாதர் கோவில் நிலம் மீட்பு - temple land encroachments recovered

கீழ்ப்பாக்கத்தில் காஞ்சி ஏகாம்பர நாதர் கோவிலுக்கு சொந்தமான 1,970 சதுரஅடி ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை மீட்டுள்ளது.

காஞ்சி ஏகாம்பர நாதர் கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு-

author img

By

Published : Jul 27, 2021, 7:36 AM IST

சென்னை: காஞ்சி ஏகாம்பர நாதர் கோவிலுக்குச் சொந்தமாக கீழ்ப்பாக்கம் ஈ.வே.ரா சாலையில் 1,970 சதுர அடி நிலம் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

10 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலத்தில் ஒன்பது கடைகள் செயல்பட்டுவந்தன. இதற்கு முன் ஒப்பந்த வாடகையில் இந்த நிலத்தை பயனாளர் ஒருவர் குத்தகைக்கு எடுத்திருந்த நிலையில், 2014ஆம் ஆண்டு அவர் இறந்தார். அதன் பிறகு சிலர் அறநிலையத்துறைக்கு வாடகை கொடுக்காமல் ஏழு வருடங்களாக கடையை நடத்தி வந்தனர். இது தொடர்பாக அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டும், கடைக்காரர்கள் காலி செய்யாத நிலையில், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணிகளை அறநிலையத்துறை அலுவலர்கள் இன்று (ஜூலை. 26) காலை தொடங்கினர்.

முதலில் கடைகளுக்கு சீல் வைத்த அலுவலர்கள், ஜே.சி.பி இயந்திரம் மூலம் கடைகளை இடித்தனர். இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மற்றும் துறை ஆணையர் குமரகுபரர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

நிலம் மீட்பு

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "கீழ்ப்பாக்கத்தில் காஞ்சி ஏகாம்பர நாதர் கோவிலுக்கு சொந்தமான 1,970 சதுர அடி ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் இந்து சமய அறநிலையத்துறை மீட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையை பொறுத்தவரை ஆக்கிரமிப்புகளை அகற்ற தயாராக இருக்கிறது. திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஏற்கனவே இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளோம்.

ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களே முன்வந்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். திமுக ஆட்சி பதவிக்கு வந்ததிலிருந்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

திருக்கோயிலுக்கு வருமானம் ஈட்டும் முயற்சியை அறநிலையத்துறை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. கோவில் நிலங்களில் கட்டப்பட்டுள்ள கடைகளில் வாடகை பணம் வசூலிப்பது குறித்து சட்ட ரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் ஏழை எளிய மக்கள் பொருளாதார ரீதியாக பயன்பெறும் வகையில் இந்த நிலத்தில் நிறுவனங்கள் கட்டப்படும்.

தமிழ்நாடு முழுவதும் இருக்கும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை பட்டியலிட மண்டல துணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க வாய்ப்பில்லை - அமைச்சர் சேகர் பாபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.