ETV Bharat / state

போக்குவரத்து கழக பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக - கமல்ஹாசன் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்
author img

By

Published : Aug 1, 2021, 9:56 AM IST

Updated : Aug 1, 2021, 10:02 AM IST

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பற்றி அரசு போக்குவரத்து சேவை பாதுகாப்பு கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் கவலையளிக்கும் விதமாக உள்ளன. தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக நீண்ட காலமாகப் போராடி வரும் பணியாளர்களின் குரலுக்குத் தமிழ்நாடு அரசு செவிசாய்க்க வேண்டும்".

காலிப்பணியிடங்களை நிரப்புக

"அரசு போக்குவரத்துக்கழகப் பணியாளர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிப்பதுடன் அனைத்து காலிப்பணியிடங்களையும் நேர்மையாக தேர்வு செய்யப்பட்டவர்களை கொண்டு நிரப்ப தமிழக அரசு ஆவன செய்யவேண்டும்".

சலுகைகள் அமல்படுத்த வேண்டும்

"அரசுப் போக்குவரத்து பணியாளர்களுக்கு கண்ணியமான பணிச்சூழலை உறுதி செய்வதுடன் ஊதிய ஒப்பந்தங்களில் ஒப்புக்கொள்ளப்பட்ட சலுகைகள் அனைத்தும் முழுமையாக அமல்படுத்த வேண்டும். பணியிட மாற்றம், பதவி உயர்வு, ஓவர் டூட்டி என அனைத்திலும் நீடிக்கும் லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும். அனைத்துத் தொழிற்சங்கங்களும் சமமாகப் பாவிக்கப்படவேண்டும்".

பஞ்சப்படி

"7 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் பஞ்சப்படி உடனடியாக வழங்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான மருத்துவக் காப்பீடு திட்டம், தரமான கேண்டீன், வசதியான ஓய்வெடுக்கும் அறைகள், உடல் நலத்தையும் உள்ள ஆரோக்கியத்தையும் பேணுவதற்கான பயிற்சிகளை அளித்தல் ஆகியவையும் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்".

"திமுக ஆட்சி போக்குவரத்துத் தொழிலாளர்களின் பொற்காலமாக அமையும் என்றார் அமைச்சர் ராஜகண்ணப்பன். அதை செயலில் காட்டும் வகையில் நடைபெற இருக்கும் பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கை கூட்டத்தொடரில்கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்". என அறிக்கையில் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : அரசு அலுவலர்களுக்கு பணித்திறன் உயர்த்தும் பயிற்சிகள் - முதலமைச்சர் அறிவுறுத்தல்

Last Updated : Aug 1, 2021, 10:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.