சித்திரை மாதத்தின் முதல் நாளான இன்று (ஏப்.14) உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடி வருகின்றனர். இன்று காலை முதல் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடும் தமிழர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் tஹொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”தேர்தல் முடிந்து நம் எதிர்காலத்திற்காகக் காத்திருக்கும் தருணத்தில், ஒன்றாய் கூடவும் எண்ணங்களைப் பகிரவும் வாய்ப்பளிக்கும் ஒரு தருணம் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு. நம் நம்பிக்கைகளுக்கு விதை போடும் இந்நன்னாளில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அம்பேத்கரின் சட்டக் கட்டமைப்பை பாஜகவால் அசைக்க முடியவில்லை - மு.க. ஸ்டாலின்