சென்னை: ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பெய்துவரும் கனமழையின் காரணமாக தமிழ்நாட்டில் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ 45 ரூபாயை கடந்துள்ளது.
இதனால், சாமானியர்கள் பலரும் வெங்காய விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அரசியல் தலைவர்கள் வெங்காய விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தவும், தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், வெங்காய விலை ஏற்றத்தால் பெரியாரே வந்தாலும், இனி யாரையும் வெங்காயம் என திட்டமாட்டார். விண்ணை எட்டும் வெங்காய விலையால் தாய்மார்களும் இனி அதனை சமையலில் பயன்படுத்த மாட்டார்கள். வெங்காயமே விலை இறங்குவாயா எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'தாய்மார்களின் கண்ணீரில் களிநடம் போடும் அதிமுக அரசு' - ஸ்டாலின் சாடல்