ETV Bharat / state

சிபிஐக்கு மாற்றி சாத்தான்குளம் வழக்கை கிடப்பில் போடாதீர்கள்:கமல் ஹாசன் ட்வீட்

author img

By

Published : Jun 29, 2020, 5:08 PM IST

சென்னை: சாத்தான்குளம் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, குட்கா வழக்குபோல் மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திருக்காமல் நீதியைக் காத்திடுங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

கமல்ஹாசன் ட்வீட்  kamalhasan tweet  kamalhasan tweet on cbi  kamalhasan tweet on sathankulam cbi enquiry  கமல்ஹாசன் சிபிஐ வழக்கு
சிபிஐக்கு மாற்றி சாத்தான்குளம் வழக்கை கிடப்பில் போடாதீர்கள்:கமல்ஹாசன் ட்வீட்

சாத்தான்குளம் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணத்திற்கு நீதி வேண்டும் என ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு மாற்றி, பொறுப்பைத் தட்டி கழிக்காதீர்கள் முதலமைச்சரே. குற்றவாளிகள் மேல் இந்திய தண்டனைத் சட்டம் 302ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள்.

கமல்ஹாசன் ட்வீட்  kamalhasan tweet  kamalhasan tweet on cbi  kamalhasan tweet on sathankulam cbi enquiry  கமல்ஹாசன் சிபிஐ வழக்கு
கமல்ஹாசன் ட்வீட்

சிபிஐ விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள். காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் சம்பவத்தில் காவல் துறையைக் காப்பாற்ற முயற்சி: கனிமொழி ட்வீட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.