மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டிளித்தார். அப்போது பேசிய அவர், "டெல்லியில் ஜே.என்.யூ. மாணவர்கள் தாக்கப்பட்டது கவலை அளிக்கிறது. மாணவர்களுக்கே இது நேர்ந்தது பீதியை ஏற்படுத்துகிறது. இது அநீதி. இந்த சர்வாதிகார போக்கு மாற வேண்டும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "சி.ஏ.ஏ. விவகாரத்தில் அதிமுக மாறிமாறி பேசிவருகிறது. எந்த இலக்கை நோக்கிப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களது வியாபாரம் நடக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள். ஆங்கிலோ இந்தியன் நியமன உறுப்பினர் உள்பட எல்லோருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். நாட்டில் நாடோடிகளாக பல நூற்றாண்டுகளாக இருப்பவர்கள் அவர்கள். அவர்களும் இந்தியர்கள்தான். அவர்கள் எங்கே செல்வார்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "தமிழ்நாட்டை இருக்க வேண்டிய இடத்திற்கு கொண்டுவந்து வைக்க வேண்டிய கடமை அனைத்து தமிழர்களுக்கும் உண்டு. உழைப்பு, வியர்வை, செல்வம் உள்ளிட்டவற்றை முதலீடாக செய்ய வேண்டும். ரஜினிகாந்துக்கும் இந்தக் கடமை உண்டு" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:
மறைமுகத் தேர்தலில் வீடியோ பதிவு செய்யப்படும்: தேர்தல் ஆணையம்