ETV Bharat / state

நடிகர் கமல்ஹாசனுக்கு ஒடிசா முதலமைச்சர் அறிவுரை.!

புவனேஸ்வர்: ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று சந்தித்து பேசினார். அப்போது அரசியல் குறித்து முதலமைச்சர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

Kamal to meet odisha CM naveen patnaik
author img

By

Published : Nov 18, 2019, 10:39 PM IST

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவர் நடிகர் கமல்ஹாசன் இரண்டு நாட்கள் அரசியல் பயணமான ஒடிசா சென்றுள்ளார். அங்கு மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை அவரது வீட்டில் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அரசியல் குறித்து பேசினார்கள். மேலும் அரசியல் நுணுக்கள் குறித்து நவீன் பட்நாயக், நடிகர் கமல்ஹாசனுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
இதையடுத்து இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் கமல்ஹாசன், “முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் நெஞ்சார்ந்த வரவேற்புக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சருடன் எனது அரசியல் பயணம் குறித்து பேசினேன். அப்போது அவரிடமிருந்து அறிவுரைகளை பெற்றேன். என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். ரஜினி குறித்த கேள்விக்கு, “நானும் ரஜினியும் ஏறக்குறைய 45 ஆண்டுகளாக நட்பை கொண்டாடி வருகிறோம். தமிழ்நாடு மீதான எங்கள் இருவரின் கவலையும் ஒரேமாதிரியானது. அவர் இன்னமும் அரசியல் கட்சி தொடங்கவில்லை. அரசியலுக்கு நாங்கள் புதியவர்கள். என்றார்.

தமிழ்நாடு அரசியல் குறித்த கேள்விக்கு, “அடுத்த 5 ஆண்டுகளில் சிறந்த தமிழ்நாட்டை காண வேண்டும்” என்றார்.
காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுமா? யாருடன் கூட்டணி வைக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு, “இது ஒரு விஷயல்ல. ஆனால், யார் ஊழல்வாதி அல்ல. இதுதான் முதல் அளவீடு.

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் நடிகர் கமல்ஹாசன் பேட்டி

நீங்கள் ஒரு சிறந்த நடிகர் அரசியலுக்கு வந்துள்ளீர்கள் இதுபற்றி? என்ற கேள்விக்கு, “இரண்டு வித்தியாசங்கள் உள்ளன. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் நடிகன். அரசியலில் நடிக்க மாட்டேன்” என்றார்.

இதையும் படிங்க : 'தளபதி' தலைப்பு கணபதியாக கேட்டது - ரஜினியிடம் என்ன சொன்னேன் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.