கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் நரேந்திர மோடி அழைப்புக்கு தான் முழு ஒற்றுமை வழங்குவதாகவும், இந்த அசாதாரண சூழ்நிலையில், நாம் அசாதாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.
மேலும், இக்கட்டான இப்படி ஒரு சூழலில் மக்கள் ஒற்றுமையாக வீட்டிற்குள் இருப்பதன் மூலம், நம்மை நாம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.