ETV Bharat / state

‘அரசு திருடிக் கொண்டிருப்பதை நிறுத்தினாலே இரண்டு தமிழகத்தை நடத்தலாம்!’ - கமல்

சென்னை : இப்போது திருடிக் கொண்டிருப்பதை நிறுத்தினாலே இரண்டு தமிழகத்தை வழி நடத்தலாம் என மாநில அரசை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கமல்
author img

By

Published : Mar 29, 2019, 5:33 PM IST

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சியினர் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தேர்தல் பரப்புரை சூடுப்பிடித்துள்ள நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் ரங்கராஜன் என்பவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர், ஊழலற்ற ஆட்சி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு, பேரிடர் காலங்களில் ஏற்படும் ஆபத்துகளை தவிர்க்கும் வகையில் நீர்நிலைகளை மேம்படுத்தல் போன்றவற்றை செயல்படுத்துவோம்.

மேலும், செய்வோம், செய்வோம் என மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் நாங்கள் செய்து காட்டுவோம் . இப்போது திருடிக் கொண்டிருப்பதை நிறுத்தினாலே இரண்டு தமிழகத்தை வழி நடத்தலாம் என கமல் மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.