நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா இன்று (செப்.12) தற்கொலை செய்து கொண்டார்.
இவரின் இந்த மறைவு தமிழ்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ஸ்ரீதுர்கா மறைவு குறித்துப் பதிவு வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "மாணவி ஜோதி துர்கா மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப்போவது என்ன? மத்திய மாநில அரசுகள் மாற்றுவழியினை சிந்தித்துச் செயல்படுத்திட வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையும், மன வலிமையையும் தரவேண்டியது நம் கடமை. செய்வோம் அதை" எனப் பதிவிட்டுள்ளார்.