ETV Bharat / state

நிரந்தரமாக நம் ஏழைகளை பிடித்துக் கொண்டிருக்கும் நோய் பசி - கமல்ஹாசன் - மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்

நிரந்தரமாக ஏழைகளை பிடித்துக் கொண்டிருக்கும் நோய் பசி என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

kamal
kamal
author img

By

Published : Nov 1, 2021, 5:52 PM IST

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் 67ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ''நம்மவரின் ஐயமிட்டு உண்" என்ற பெயரில் ஒன்பது வாகனங்களில் சுமார் ஏழாயிரம் பேருக்கு உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. .

இன்று தொடங்கி கமலின் பிறந்த நாளான நவம்பர் 7ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 7 லட்சம் பேருக்கு அன்னதானம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் ஒன்பது வாகனங்களில் சுமார் ஏழாயிரம் பேருக்கான உணவை வழங்கிடும் பயணத்தை கமல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

kamal
நம்மவரின் ஐயமிட்டு உண்

முன்னதாக கமல் பேசுகையில், "பட்டினி பட்டியலில் இந்தியா பின்னாடி சென்றுகொண்டு இருக்கிறது. பிறந்த நாள் என்பதற்காக உணவு வழங்கவில்லை. அரசியல் குறியீடு என்றே நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். மேலும் அரசு செய்ய வேண்டியதை மக்கள் நீதி மய்யம் நினைவுப்படுத்துகிறது. மருந்துக்கு நிகராக உணவு உள்ளது. பல நபர்கள் அது கிடைக்காமல் உள்ளனர்.

நிரந்தரமாக நம் ஏழைகளை பிடித்துக் கொண்டிருக்கும் நோய் பசி. இன்று நாம் கொடி அசைத்து தொடங்கி வைப்பது அன்னக்கொடி" என்றார்.

இதையும் படிங்க: ’கோரிக்கை வைக்கவே உயிரிழக்க வேண்டும் என்ற நிலைமை கொடுமை’ - கமல்ஹாசன் ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.