ETV Bharat / state

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை; குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்! - ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை வரும் 28-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை; குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்

author img

By

Published : May 13, 2022, 7:13 PM IST

சென்னை: ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் ரூ.1.7 கோடி மதிப்பீட்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 26-ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ், ஜூன் 3-ம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை நிறுவப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.
இந்தநிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சுமார் 16 அடியில் ரூ. 1 கோடியே 7 லட்சம் செலவில் தயாராகும் இந்த சிலை 12 அடி பீடத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலை தயாரிப்புப் பணிகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டு வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் முதலமைச்சரின் சிலையை வரும் 28-ம் தேதி இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார். இந்த விழாவில் முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் உள்ளிட்டப் பல பிரமுகர்கள் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த 1975-ம் ஆண்டிற்குப் பிறகு 2022-ல் சென்னை அண்ணா சாலையில் மீண்டும் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 21 சிறந்த எழுத்தாளர்களுக்குப் பரிசுத்தொகை வழங்கி முதலமைச்சர் பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.