ETV Bharat / state

மியான்மரில் மீட்கப்பட்ட மீனவர்களை தமிழ்நாடு அழைத்துவர உடனடி நடவடிக்கை தேவை; உறவினர்கள் வலியுறுத்தல்!

சென்னை: மியான்மரில் மீட்கப்பட்ட மீனவர்களை உடனடியாக தமிழ்நாடு அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்களின் உறவினர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

kaasimedu fisherman myanmar
மியான்மரில் மீட்கப்பட்ட மீனவர்களை தமிழ்நாடு அழைத்துவர உடனடி நடவடிக்கை தேவை; உறவினர்கள் வலியுறுத்தல்
author img

By

Published : Sep 23, 2020, 5:15 PM IST

சென்னை காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணமால் போன மீனவர்கள் 55 நாட்களுக்குப் பின்பு மியான்மர் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டனர். இதையடுத்து கடந்த திங்கட்கிழமை அவர்கள் பத்திரமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து உறவினர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்நிலையில், மீனவர்களை மீன்வளத்துறை மூலம் பத்திரமாக மீட்டுக்கொண்டுவரும் பணிகளில் தாமதம் ஏற்படுவதாகவும், ஐந்து நாட்களில் சென்னை திரும்புவதாக கூறிய நிலையில், இதுவரை எவ்வித உண்மைத் தகவலையும் மீன்வளத்துறை அளிக்கவில்லை என உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மியான்மரில் விசைப்படகு கடலில் சிக்கியதால் அவர்களுக்கு உதவுவதற்காக சென்ற இரண்டு மீனவர்களில் ஒருவர் கரை திரும்பியுள்ள நிலையில், ஒருவரின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை என சக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால், கலக்கம் அடைந்துள்ள மீனவர்களின் உறவினர்கள், மீன்வளத்துறையின் மெத்தனப்போக்கே இதற்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர். மீனவர்கள் காணாமல் போய் 55 நாட்களுக்குப் பின்பு மியான்மரில் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலும், மீனவர்களின் நிலை குறித்து அறியமுடியாமல் இருப்பது உறவினர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காசிமேட்டிலிருந்து காணாமல்போன பத்து மீனவர்கள் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.