ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் மோடியின் பிபிசி ஆவணப்படத்தை திரையிடுவோம் - சிபிஐ(எம்) அறிவிப்பு - லேட்டஸ்ட் பாஜக நியூஸ்

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குஜராத் மதக் கலவரம் 2002 குறித்த பிபிசி நிறுனத்தின் ஆவணப்படத்தை (BBC Documentary On 2002 Gujarat Riots) தமிழ்நாடு முழுவதும் திரையிடப்போவதாக சிபிஐ(எம்) கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 27, 2023, 4:19 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பிபிசி ஆவணப்படத்தை திரையிட உள்ளோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று (ஜன.27) தெரிவித்துள்ளார்.

சிபிஐ(எம்) கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜன.27) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் அரசியல் குறித்தும், மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்த பல்வேறு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியும் பிபிசி நிறுவனம், 2 பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு எழுந்துள்ள சவாலை சுட்டிக்காட்டுகிறது.

குஜராத் இனப்படுகொலைகளை (BBC Documentary On 2002 Gujarat Riots) அன்றைய மோடி தலைமையிலான மாநில அரசு நிர்வாகம் எப்படி கையாண்டது என்பதில் புதிய ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய ஊடகங்களால் செய்ய முடியாத தரமான புலனாய்வினை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களையும், பாஜகவின் தரப்பையும் பேட்டியெடுத்து அதனை பார்வையாளர்கள் முன் அப்படியே வைத்திருக்கிறார்கள்.

ஒன்றிய அரசாங்கம் இந்த ஆவணப்படத்தின் மீது அச்சம் கொண்டு, இணைய வெளியில் இருந்தே அகற்றி வருகிறது. அதற்காக ஐ.டி. சட்டத்தின் பிரிவுகளை (அவசர கால) தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், இந்த நடவடிக்கை தவறானது, சட்ட விரோதம் என்பதை ஏற்கனவே எதிர்க்கட்சிகளும் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த நிலையில், இணையத்தில் பார்க்க முடியாத ஆவணப்படத்தை ஆங்காங்கே பொதுமக்களும், ஜனநாயக அமைப்புகளும் திரையிடல் செய்து பார்த்து வருகிறார்கள். சென்னையில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆவணப்படம் திரையிடல் செய்வதை காவல்துறை தடுத்ததுடன், செல்போனில் படம் பார்த்ததற்காக அவர்களைக் கைது செய்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆவணப்படம் பார்ப்பதை பல்கலைக்கழக நிர்வாகம் தடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகள் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாதவை.

ஆவணப்படத்தை பார்த்து செய்தியை தெரிந்துகொண்டு அதன் மீது முடிவு மேற்கொள்வது இந்திய குடிமக்களுக்கு உள்ள அடிப்படையான உரிமை ஆகும். ஆனால், அடிப்படை உரிமைக்கே விரோதமாக காவல் துறையும், கல்வி நிறுவனங்களும் செயல்பட்டுள்ளன. சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு இந்த நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் இடதுசாரி, ஜனநாயக அமைப்புகள் முன்னின்று ஆவணப்பட திரையிடலையும், அதன் மீதான உரையாடலையும் முன்னெடுக்கவுள்ளோம்.

பொதுமக்களின் பார்வையில் இருந்து உண்மைகளை மறைப்பது மேன்மேலும் பிற்போக்கான சூழலுக்கே நாட்டை இட்டுச் செல்லும் என்பதை உணர்ந்து, தமிழ்நாடு அரசும், காவல்துறையும் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாத்திட வேண்டும் என அழுத்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

2002 குஜராத் மதக் கலவரமும் பிபிசியும்: கடந்த 2002ஆம் ஆண்டு தற்போதைய பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது, நிகழ்த்தப்பட்ட மதக் கலவரத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதில் குறிப்பாக, இஸ்லாமியர்கள் அதிகளவில் பெரும் பாதிப்புகளை சந்தித்ததோடு, பல குடும்பத்தினர் தங்களின் குடும்பங்களை இழந்து நிர்கதியாக்கப்பட்டனர்.

ரயிலில் குண்டுகள் வெடித்ததில் ஆயிரக்கணக்கானோர் பரிதாபமாக பலியாகினர். இதனையடுத்து இஸ்லாமியர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. அம்மாநில அரசின் புள்ளிவிவரப்படி, ஏறத்தாழ 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகின. இந்தச் சம்பவம் அம்மாநிலத்தில் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தியது. இதனிடையே பிபிசி நிறுவனம் 2002-ல் குஜராத்தில் நடந்த இஸ்லாமியர்கள் மீதான இந்த இனப்படுகொலையை வெளி உலகத்திற்கு கொண்டு வருவதன் மூலம் இந்தியாவிலுள்ள சில அரசியல்வாதிகளின் அரசியல் லாபத்திற்காக வன்முறைகள் எவ்வாறு எல்லாம் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன என்பதை தகுந்த ஆவணங்களுடன் வெளிப்படுத்தும் முயற்சியில் இறங்கியது.

இதனைத்தொடர்ந்து, இந்த குஜராத் இனப்படுகொலை 2002-யை மையமாகக் கொண்டு இரண்டு பகுதிகளை உடைய ஒரு ஆவணப்படத்தை தயாரித்து ஜனவரி 26, 2023 குடியரசு தினத்தில் வெளியிட இருந்தது. ஆனால், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையானது இதற்கு அனுமதி தர மறுப்பதோடு, இந்த ஆவணப்படத்தை தடை செய்வதாக அறிவித்தது. இதனைக் கண்டிக்கும் விதமாக, பல்வேறு அரசியல் கட்சிகள் மக்களின் அடிப்படையான உரிமைகள் மறுக்கப்படுவதாக கண்டனங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இந்த ஆவணப்படத்தை திரையிடப்போவதாக கம்யூனிஸ்ட், இந்திய மாணவர் சங்கம் அமைப்பு, காங்கிரஸ் உள்ளிட்டவைகள் அறிவித்த நிலையில், சில இடங்களில் மாணவர்கள் திரையிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "மோடி பற்றிய பிபிசி ஆவணப்படம் அரசு வழிகாட்டுதல்படி வெளியீடு" - துணைவேந்தர் திட்டவட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.