ETV Bharat / state

உத்ரா கொலை வழக்கு: இன்று தீர்ப்பு - சென்னை மாவட்ட செய்திகள்

கேரளாவில் பாம்பைப் பயன்படுத்தி மனைவியைக் கொடூரமாகக் கொலைசெய்த வழக்கில் அந்தப் பாம்பு ஏழு நாள்கள் பட்டினியாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரது கணவருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவ்வழக்கு மீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது.

இன்று தீர்ப்பு
இன்று தீர்ப்பு
author img

By

Published : Oct 13, 2021, 6:24 AM IST

சென்னை: கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் ஒருபுறம் படித்த பெண்களே வரதட்சணை கொடுமைகளுக்கு உள்ளாகி தற்கொலை முடிவுக்குச் செல்வதும், மறுபுறம் மணமுடித்து வந்த இளம்பெண்களை கணவர் குடும்பத்தார் தற்கொலைக்குத் தூண்டி உயிரைக் காவு வாங்குவதும் நடைபெற்றுவருகிறது.

கேரள மாநிலம் கொல்லம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த உத்ரா (25) என்ற பெண் 2020 மே 7ஆம் தேதி பாம்பு கடித்த நிலையில் பெற்றோர் வீட்டில் இறந்துகிடந்தார். இது குறித்து அவரின் கணவர் சூரஜிடம் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.

உத்ராவை திருமணம் செய்த வங்கி ஊழியரான சூரஜ், உத்ராவுக்கு வரதட்சணையாக வழங்கப்பட்ட 10 லட்சம் ரூபாய், 100 பவுன் நகை, நிலம், புதிய கார் அனைத்தையும் சொந்தமாக்கிக் கொள்ளவும், வேறு திருமணம் செய்துகொள்ளவும் திட்டமிட்டுள்ளார். தங்களுக்கு ஒரு வயதில் குழந்தை இருந்தபோதும், தனது மனைவி உத்ராவை சூரஜ் கொல்ல நினைத்துள்ளார்.

பாம்பை கடிக்கவைத்து கொலை

அடூரில் உள்ள தனது வீட்டில் வைத்து அணலி வகை பாம்பைக்கொண்டு கடிக்கவைத்து உத்ராவை சூரஜ் கொலை செய்ய முதலில் முயற்சித்துள்ளார். இதில் காயமடைந்த உத்ரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் தப்பினார்.

சிகிச்சைக்குப் பின்னர் கொல்லம் அஞ்சல் பகுதியில் உள்ள தன் பெற்றோர் வீட்டில் ஓய்வில் இருந்த உத்ராவை சூரஜ் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, பாட்டிலில் அடைத்து எடுத்துச் சென்ற நல்ல பாம்பைக் கொண்டு உத்ராவைக் கடிக்கவைத்துள்ளார்.

உத்ரா இறந்ததை உறுதி செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். மனைவியைக் கொன்றபிறகு நாக தோஷம் காரணமாக அவர் பாம்பு கடித்து இறந்துள்ளதாக மற்றவர்களை நம்பவைக்க இவ்வாறு செய்துள்ளார்.

கணவர் குற்றவாளி என தீர்ப்பு

இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட சூரஜுக்குப் பிணை வழங்கப்படவில்லை. வழக்கை விசாரித்த கொல்லம் நீதிமன்றம் சூரஜ் குற்றவாளி என அக்டோபர் 11ஆம் தேதி அறிவித்துள்ளது. இன்று (அக். 13) சூரஜுக்கு என்ன தண்டனை என்பதை கொல்லம் நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.

இந்த வழக்கில் சூரஜுக்கு பாம்பு கொடுத்த சுரேஷ் என்பவர் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். மொத்தம் 87 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டனர். 288 ஆவணங்கள், 48 பிரமாண பத்திரங்களும் தாக்கல்செய்யப்பட்டன. பாம்பைக் கொண்டு கடிக்கவைப்பதற்கு முன்பு அது சம்பந்தமாக சூரஜ் இணையதளத்தில் தேடிய ஆதாரங்களும் கொல்லம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

பாம்பின் தலையைப் பிடித்து கடிக்கவைப்பு

அதிலும், சூரஜ் பாம்பின் தலையைப் பிடித்து தன் மனைவி உத்ராவை கடிக்க வைத்துள்ளது தெளிவாகியுள்ளது. ஏனென்றால், சாதாரணமாக பாம்பு கடித்தால் அதன் பற்களுக்கு இடையே உள்ள இடைவெளி 1.7 செ.மீ. இருக்கும்.

அதன் தலையைப் பிடித்து கடிக்கவைத்தால் பற்களுக்கு இடையேயான இடைவெளி 2.8 செ.மீ. வரை இருக்கும் எனச் சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டது. இதற்காக குளத்துப்புழா அரிப்பாவில் உள்ள வனத் துறை பயிற்சி மையத்தில் கடந்த ஆண்டு ஜூலை கடைசி வாரத்தில் சோதனை நடத்தப்பட்டது.

என்ன தண்டனை கிடைக்கும்?

மேலும் உத்ராவை கடித்த பாம்பின் உடற்கூராய்வு முடிவில் அந்தப் பாம்பு ஏழு நாள்கள் பட்டினியாக இருந்ததும் கண்டறியப்படுள்ளது. இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: பாம்பை விட்டு மனைவிக் கொடூர கொலை.. நீதிமன்றம் தீர்ப்பு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.