ETV Bharat / state

"பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விலக முடியாது" - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திட்டவட்டம்!

Madras high Court: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் இருந்து விலக முடியாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 5:42 PM IST

சென்னை: 1996-2001ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்குச் சொத்து குவித்ததாக, 2002ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையிலிருந்த இந்த வழக்கு, வேலூருக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மேல் முறையீடு செய்யப்படாததால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த வழக்கு தொடர்பாகப் பதிலளிக்கும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கும், பொன்முடி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கைத் தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைத்து, வேறு ஒரு நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும் என்பதால், வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என லஞ்ச ஒழிபுத் துறை தரப்பிலும், பொன்முடி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விசாரணையைத் தள்ளி வைத்திருந்தார்.

அதன்படி அந்த வழக்கு இன்று (செப்.14) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, வழக்கை வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றியது உயர் நீதிமன்ற நிர்வாக உத்தரவு என்பதால், வழக்கில் பதிவுத்துறையைச் சேர்த்து, விளக்கத்தைக் கேட்டிருக்க வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் விளக்கத்தையும் கேட்கவில்லை என்றும் தெரிவித்தார்.

வழக்கு விசாரணையின் போது பதிவுத்துறை இணைக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதி, அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கின் விசாரணையை அக்டோபர் 9ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: "வேங்கைவயல் விவகாரத்தில் அரசு ஏன் மவுனமாக இருக்கிறது" - சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.