ETV Bharat / state

பெண்களை இழிவாகப் பேசிய மிஸ் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் கைது!

சென்னை: பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோக்கள், கருத்துகள் வெளியிட்டதாக மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜோ மைக்கேல் பிரவீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

joe michael
joe michael
author img

By

Published : Dec 29, 2019, 8:28 AM IST

அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் காங்கிரஸ் தேசிய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் அப்சரா ரெட்டி, அழகு கலை நிபுணர் ஜெயந்தி ஆகியோர் புகார் ஒன்றை அளித்திருந்தனர்.

அதில், ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் சமூக வலைதளங்களில் பெண்களை இழிபடுத்தும் வீடியோக்கள், கருத்துகளைப் பதிவிடுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். பெண்களுக்கு ஆதரவாகப் பேசும் அமைப்பினரையும் பிரவீன் இழிவாகப் பேசுவதாகவும் அந்தப் புகாரில் கூறியிருந்தனர்.

இதுதொடர்பாக அடையாறு மகளிர் காவல் துறையினர் விசாரணைக்காக இரண்டு முறை சம்மன் கொடுத்தபோதும் ஜோ மைக்கேல் ஒருமுறை கூட அஜராகவில்லை.

இதுதொடர்பாக அடையாறு மகளிர் காவல் துறையினர் விசாரணைக்கு வருமாறு வீட்டுக்குச் சென்று அழைத்தபோது பெண் காவலர்களை ஜோ மைக்கேல் பிரவீன் தரக்குறைவாகப் பேசியதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அடையாறு மகளிர் காவல் துறையினர் பெண் மானத்துக்கு பங்கம் விளைவித்தல், குற்றம் கருதி கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜோ மைக்கேல் பிரவீனை கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.

ஜோ மைக்கேல் பிரவீன் மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டுள்ளார். நடிகையும் அழகியுமான மீரா மிதுன் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இவர் புகார் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராகுல் ஒரு பொய்யர், நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறார்: பாஜக

Intro:Body:*பெண்களைப் பற்றி இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் கருத்துக்கள் வெளியிட்ட மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜோ மைக்கல் பிரவீன் கைது!*

அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் காங்கிரஸ் தேசிய மகிலா காங்கிரஸ் பொதுச் செயலாளர் அப்சரா ரெட்டி மற்றும் அழகு கலை நிபுணர் ஜெயந்தி ஆகியோர் புகார் ஒன்றை அளித்து இருந்தனர்.

அதில் ஜோ மைக்கில் பிரவீன் என்பவர் சமூக வலைதளங்களில் பெண்களை பற்றி இழிவாகவும் கருத்துக்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். பெண்களுக்கு ஆதரவாக பேசும் அமைப்பினரையும் இழிவாக பேசுவதாகவும் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அடையாறு மகளிர் காவல் துறையினர் விசாரணைக்காக இரண்டு முறை சம்மன் கொடுத்தபோதும் ஜோ மைக்கேல் ஒருமுறை கூட சென்றது இல்லை.

இதுதொடர்பாக அடையாறு மகளிர் காவல் துறையினர் விசாரணைக்கு வருமாறு வீட்டுக்கு சென்று அழைத்தபோது பெண் காவலர்களை ஜோ மைக்கல் பிரவீன் தரக்குறைவாக பேசியுள்ளார்

இது தொடர்பாக அடையாறு மகளிர் போலீசார் பெண் மானத்துக்கு பங்கம் விளைவித்தல், குற்றம் கருதி கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து ஜோ மைக்கல் பிரவீனை கைது சிறைக்கு அனுப்பினர்.

ஜோ மைக்கல் பிரவீன் மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டுள்ளார். நடிகையும் அழகியுமான மீராமிதுன் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.