ETV Bharat / state

வேளச்சேரியில் ஜார்க்கண்ட் இளைஞர் கொலை... நடந்தது என்ன? - சென்னையில் ஜார்க்கண்ட் வாலிபர் கொலை

வேளச்சேரியில் ஜார்க்கண்ட் இளைஞரை கொலை செய்த வழக்கில் 7 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேளச்சேரியில் ஜார்க்கண்ட் வாலிபர் கொலை
வேளச்சேரியில் ஜார்க்கண்ட் வாலிபர் கொலை
author img

By

Published : Feb 3, 2023, 3:04 PM IST

சென்னை: ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மண்டல் (27). இவர் வேளச்சேரி செல்வா நகரில் நடக்கும் கட்டட கட்டுமான நிறுவனத்தில் கொத்தனாராக பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 27ஆம் தேதி நண்பர்களுடன் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தபோது எதிரே வந்த பெருங்குடி, கல்லுக்குட்டையைச் சேர்ந்த 5 சிறுவர்கள் மீது மோதி உள்ளனர்.

இதில் இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டதில் வடமாநில இளைஞர்கள் சிறுவர்களைத் தாக்கிவிட்டு சென்று உள்ளனர். பின்னர் 5 சிறுவர்களும் கல்லுக்குட்டைக்கு சென்று வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கியதாகக் கூறி, மேலும் 4 பேரை அழைத்து வந்தனர். மீண்டும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ரமேஷ் மண்டல் பலத்த காயம் அடைந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் மருத்துவமனையில் ரமேஷ் மண்டல் சிகிச்சைப் பலனின்றி பலியானார். இதுகுறித்து வேளச்சேரி காவல் ஆய்வாளர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன்(20), கோகுல் (19) மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட 7 சிறுவர்களை கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: காதலிப்பதாக கூறி 17 வயது சிறுவன் கடத்தல்.. போக்சோவில் 33 வயது பெண் கைது..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.