ETV Bharat / state

தனியார் தொலைக்காட்சி நிறுவனர் வீட்டில் திருடியவர் கைது... - சென்னை நகை திருட்டு

சென்னையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனர் வீட்டில் சுமார் 50 சவரன் தங்க நகைகள் திருடியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Jewelry theft  chennai Jewelry theft  Jewelry theft at Private TV founder home  நகை திருட்டு  சென்னை நகை திருட்டு  தனியார் தொலைக்காடி நிறுவனர் வீட்டில் நகை திருட்டு
தனியார் தொலைக்காட்சி நிறுவனர் வீட்டில் திருட்டு
author img

By

Published : Mar 21, 2022, 10:40 AM IST

சென்னை: தனியார் தொலைக்காட்சியின் நிறுவனரான ஐசக் லிவிங்ஸ்டன் (51), கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 28ஆம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.

நிகழ்ச்சி முடிந்ததும் வீடு திரும்பிய இவர், வீட்டின் அலமாரியை திறந்து பார்த்தபோது, சுமார் 50 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இத்துடன் வீட்டில் வைத்திருந்த ரூ.7 ஆயிரம் ரொக்கப் பணமும் காணாமல் போயுள்ளது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஐசக் லிவிங்ஸ்டன் மற்றும் குடும்பத்தார், தங்களின் வீட்டில் கடந்த ஐந்து வருடமாக வீட்டு வேலை செய்துவரும் கனிமொழி என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக, கொடுங்கையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த அசாருதீன் (31) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அசாருதீன் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து அவரிடம் இருந்து 50 சவரன் தங்க நகை மற்றும் 7000 ரூபாய் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றம் முன்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: Viral Audio: விசாரணைக்கு அழைத்த காவலர்; மிரட்டல் விடுத்த ரவுடி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.