ETV Bharat / state

நகைக்கடன் தள்ளுபடி: திருத்தப்பட்ட விவரங்களை கோரிய கூட்டுறவுத் துறை - Co-operative department

கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பயனாளர்களின் திருத்தப்பட்ட விவரங்களை கூட்டுறவுத் துறை கோரியுள்ளது.

கூட்டுறவு துறை
கூட்டுறவு துறை
author img

By

Published : Sep 15, 2021, 6:54 PM IST

சென்னை: திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் வரை நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது.

அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் செப்.13ஆம் தேதி அன்று சட்டப்பேரவையில், ”கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தகுதியின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படும்” என அறிவித்தார்.

இதற்காக தமிழ்நாடு அரசு ஒரு மாத காலம் தீவிர ஆய்வு செய்து கடன் பெற்றவர்களின் விவரம், வங்கி, கடன் தொகை என 51 விதமான தகவல்களை சேகரித்தது.

மேலும், “நகைக் கடன் தள்ளுபடி சரியான, தகுதியான ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமே செய்யப்படும். நகைக்கடனில் முறைகேடு செய்த கூட்டுறவு வங்கிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு குடும்பத்தில் ஒரு பயனாளர் கடன் மட்டும் தள்ளுபடி, ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படாது" என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், பயனாளர்களின் திருத்தப்பட்ட விவரங்களை கூட்டுறவுத் துறை, கூட்டுறவு வங்கிகளிடம் கோரியுள்ளது.

இதையும் படிங்க: 10.5% வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.