ETV Bharat / state

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கு: தடா ரஹீம் தவறாகப் பேசியதாகப் புகார் - தடா ரஹீம் தவறாக பேசியதாக புகார்

தனது கணவர் சாந்தகுமார் கொலை வழக்கு தொடர்பாக தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்பிய தடா ரஹீம், அதை வெளியிட்ட யூ-ட்யூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜீவஜோதி புகார் அளித்துள்ளார்.

தடா ரஹீம் தவறாக பேசியதாக புகார்
தடா ரஹீம் தவறாக பேசியதாக புகார்
author img

By

Published : Mar 9, 2022, 6:58 PM IST

சென்னை: தமிழ்நாட்டையே உலுக்கிய பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்குத் தொடர்பாக மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு பிரின்ஸ் சாந்தகுமார் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது. மேலும், இந்த கொலைக்கு சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் தான் காரணம் என பிரின்ஸ் சாந்தகுமாரின் மனைவி ஜீவஜோதி பரபரப்பு புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகார் தொடர்பாக கீழமை நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை வழக்குகள் நடைபெற்று, சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகள் என அனைத்து நீதிமன்றங்களும் உறுதி செய்து, ராஜகோபாலுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. சிறையில் அடைக்க முயன்றபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு ராஜகோபால் மரணமடைந்தார்.

தடா ரஹீம் தவறாகப் பேசியதாகப் புகார்

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கு

இந்த சர்ச்சை வழக்கு முடிந்த நிலையில், மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரின்ஸ் சாந்தகுமாரின் மனைவி ஜீவஜோதி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 2001ஆம் ஆண்டு கூலிப்படையை ஏவி கணவரை கொன்றதாக சரவணபவன் ராஜகோபால் மீது வழக்குத்தொடர்ந்து, போராடி உச்ச நீதிமன்றம் வரை சென்று ராஜகோபாலுக்கு ஆயுள்தண்டனை பெற்றுக்கொடுத்தேன்.

இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி ஒரு யூ-ட்யூப் சேனலில் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலச் செயலாளரான தடா ரஹீம் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் ராஜகோபால் சிறையில் இருந்த போது தடா ரஹீமிடம் கொலை வழக்கு குறித்து பல உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பேசியதாகத் தெரிவித்துள்ளார்.

தடா ரஹீம் தவறாகப் பேசியதாகப் புகார்

மேலும் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி தடா ரஹீம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் பேசி வருகிறார். இதனால் உடனடியாக தடா ரஹீம் மற்றும் அந்த வீடியோவை பதிவேற்றம் செய்த யூ-ட்யூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கப் புகார் அளித்துள்ளேன்" என்றார்.

கடந்த 2001ஆம் ஆண்டு தனது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை செய்யப்பட்டதையடுத்து, 2006ஆம் ஆண்டு தஞ்சாவூரைச் சேர்ந்த நபரை ஜீவஜோதி மறுமணம் செய்துகொண்டார். மேலும் அவர் தஞ்சாவூர் மாவட்ட பாஜக துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோவை மாணவர் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து இருப்பது அபாயகரமானது - கார்த்தி சிதம்பரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.