வேதா நிலையத்தில் உள்ள அசையும், அசையா சொத்துக்களை அரசு கையகப்படுத்தியது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வழக்கு தொடர்ந்தார்.இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஜெ.தீபா தரப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எங்கிருந்தீர்கள் ? எனக் கேள்வி எழுப்பினார். அத்துடன் தீபா தொடர்ந்த இந்த வழக்கை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்து உத்தரவிட்டார்.
இதையடுத்து சென்னை தி.நகரிலுள்ள இல்லத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெ.தீபா, "ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் நான் போயஸ்கார்டன் செல்லவில்லை என்றுக்கூறுகிறார்கள் அரசு தரப்பில்.நான் போயஸ்கார்டனில் தான் நான் பிறந்தேன், வளர்ந்தேன் சில குடும்ப சூழல் காரணமாகபின் நாங்கள் அங்கிருந்து வெளியே சென்று தங்கினோம்.
இரு முறை சிறை சென்றார் அப்போது நான் நேரில் சென்று சந்தித்தேன், எங்களிடன் பல மணி நேரம் பேசினார்.
2014ல் சிறையிலிருந்த போது ஜெயலலிதா வரச்சொல்லியதாக பூங்குன்றன் என்னை தொலைபேசியில் அழைத்தார். நாங்களும் சென்றோம்
எங்களை ஜெயலலிதாவை பார்க்கவிடாமல் சசிகலா குடும்பம் தடை செய்தது. எனக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் கிடையாது, அவர்கள் ஜெயலலிதாவிற்கு கெடுதல் செய்கிறார்கள் என நான் நினைத்தேன்.
வெளி உலகத்திலிருந்தும் குடும்பத்திலிருந்தும் ஜெயலலிதாவை சசிகலா குடும்பத்தினர் தனிமைப்படுத்தினர்.சசிகலா குடும்பத்தால் பலமுறை நான் அசிங்கப்படுத்தப்பட்டது யாருக்கும் தெரியாது.
போயஸ் தோட்ட இல்லம் இது எங்கள் உடமையல்ல உரிமை, நீதிமன்றத்தில் கூட நியாயம் கிடைக்கவில்லை என்றால் அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.
ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது இப்போது இவர்களுக்கு தேவையில்லை, நினைவிடம் அமைப்பது தான் முக்கியம்.
தெய்வத்தையும் , ஜெயலலிதா ஆன்மாவையும் தான் நம்பி இருக்கின்றேன்.ஜெயலலிதா விற்கு உண்மையாக இருந்தால் அவர்கள் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை நடத்த வேண்டும்.அரசியல் வேண்டாம் என்பதில் தெளிவாக இருக்கின்றேன்.அரசியலை நான் விரும்பவில்லை " எனக் கூறினார்.