ETV Bharat / state

மதுபான ஆலை தொழிற்சாலையில் வருமானவரித்துறை சோதனை!

சென்னை: எஸ்.என்.ஜே மதுபான வகை தொழிற்சாலை குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

IT raid
author img

By

Published : Aug 7, 2019, 11:29 AM IST

எஸ்.என்.ஜே மதுபான வகை தொழிற்சாலை குழுமத்திற்கு சொந்தமான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா, பாண்டிச்சேரி, கோவா உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.என்.ஜே மதுபானம் தயாரிக்கும் ஆலையிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு மதுபானம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வருமானவரித்துறை சோதனை

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர தூதராகவும் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.என்.ஜே நிறுவனம் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, சென்னை நந்தனம் சிஐடி நகரில் உள்ள எஸ்என்ஜே மதுபான வகை தொழிற்சாலை குழுமத்திற்கு சொந்தமான இடத்தில், 150க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Intro:Body:மதுபான ஆலை தொழிற்சாலையில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை..*

எஸ்.என்.ஜே மதுபான வகை தொழிற்சாலை குழுமத்திற்கு சொந்தமான தமிழகம்,ஆந்திர பிரதேசம்,கேரளா,பாண்டிச்சேரி மற்றும் கோவா உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.என்.ஜே மதுபான தயாரிக்கும் ஆலையிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு மதுபானம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றனர்.மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர தூதராகவும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து 150க்கும் மேற்பட்ட வருமான வரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை நந்தனம் சிஐடி நகரில் அமைந்துள்ள எஸ் என் ஜே மதுபான வகை தொழிற்சாலை குழுமத்திற்கு சொந்தமான உள்ள இடத்திலும் சோதனை நடைப்பெற்று வருகின்றனர். இந்த சோதனையானது காலை முதல் தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

பின்னர் சோதனையின் முடிவிலேயே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.