ETV Bharat / state

நாமக்கல் ஐ.டி. ரெய்டு - மாணவர்களிடம் முறைகேடாக வசூலித்த ரூ. 30 கோடி பறிமுதல்! - ஐடி துறையினர் பயிற்சி நிறுவனங்களில் சோதனை

சென்னை: மாணவர்களிடம் முறைகேடாக வசூலித்த ரூ.180 கோடிகளிலிருந்து ரூ.30 கோடியை வருமானவரித் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

latest it raids in tamilnadu, தமிழ்நாட்டில் ஐ.டி துறையினர் சோதனை
author img

By

Published : Oct 14, 2019, 3:06 PM IST

Updated : Oct 14, 2019, 4:46 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் நடந்துவரும் வருமானவரித் துறை சோதனை குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், வருமானவரித் துறையின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள், நீட் போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கட்டணப் பயிற்சி வகுப்புகளில் கடந்த 11ஆம் தேதி முதல் சோதனைகள் நடத்தப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், "நாமக்கல், பெருந்துறை, கரூர், சென்னை உள்ளிட்ட 17 பகுதிகளில் கட்டுமானம், கல்வி நிலையங்கள், அதன் உரிமையாளர் தொடர்பான வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.

பள்ளி மாணவர்களிடம் கூடுதலாகவும், முறைகேடாகவும் கட்டணங்கள் வசூலிப்பதாக வந்த புகார்களின் அடிப்படையில் நடைபெற்ற இச்சோதனையில் பள்ளியின் ஊழியர்கள், பள்ளி வளாகங்கள் எனக் கணக்கில் வராத சுமார் ரூ.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அந்நிறுவன ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய பணம், அவர்களது பினாமிகள், புத்தகங்கள் உள்ளிட்ட பொருள்கள் வாங்கியவை என கணக்கில் காட்டப்பட்ட ரூ.150 கோடிகள் குறித்தும் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாமக்கல் தனியார் நீட் பயிற்சி மையத்தில் சோதனை!

Intro:Body:மாணவர்களிடம் முறைகேடாக வசூலித்த 180 கோடிகள்; 30 கோடி பறிமுதல் செய்யப்பட்டு தொடர்ந்து 4வது நாளாக நடந்துவரும் வருமானவரிச் சோதனை.கைப்பற்றப்பட்ட பணத்தின் புகைப்படம் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் நடந்து வரும் வருமானவரித் துறை சோதனை குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,
வருமானவரித் துறையின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் நீட் போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான கட்டண பயிற்சி வகுப்புகளில் கடந்த 11.10.19 ம் தேதி முதல் சோதனைகள் நடத்தப்பட்டது. நாமக்கல், பெருந்துறை, கரூர் மற்றும் சென்னை உள்ளிட்ட 17 பகுதிகளில் மேற்படி தொழில், கட்டுமானம்,கல்வி நிலையங்கள் மற்றும் அதன் உரிமையாளர் தொடர்பான வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டது.

வருமான வரித்துறைக்கு, பள்ளி மாணவர்களிடம் கூடுதலாகவும், முறைகேடாகவும் கட்டணங்கள் வசூலிப்பதோடு அதற்காக பெற்றோர்களிடம் கொடுக்கும் போது ஒரு பில்லும், பின்னர் வருமானவரித் துறைக்கு வேறு மாதிரியான பில்களும் தயாரித்து முறைகேடுகளில் ஈடுபடுவதாக வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த சோதனைகளில் பள்ளியின் ஊழியர்கள், மற்றும் பள்ளி வளாகங்கள் என கணக்கில் வராத சுமார் 30 கோடிகள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பினாமிகள், பல்வேறு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டியவை மற்றும் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்கிகவை என கணக்கில் காட்டப்பட்டு சுமார் 150 கோடிகள் வரை உள்ளது குறித்தும் வருமானவரித் துறையின் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுConclusion:
Last Updated : Oct 14, 2019, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.