நிவர், புரவி புயல்களின் தாக்கத்தின் காரணமாக, பாதிப்பிற்குள்ளான விவசாயிகளின் நலனை காக்கும் பொருட்டு, வேளாண் பெருமக்கள் அதிக உற்பத்தி செய்து, பேரிடரால் பெரும் பாதிப்பு அடைந்துள்ளதை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மானாவாரி, நீர்பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கும், நீர்பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத் தொகையான 13 ஆயிரத்து 500 ரூபாய் என்பதை, 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல், மானாவாரி நெற்பயிர் தவிர, அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையான ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் 7 ஆயிரத்து 410 ரூபாய் என்பதை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், பல்லாண்டு கால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் 18 ஆயிரம் ரூபாய் என்பதை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில், இதற்கான அரசாணையை இன்று தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய மு.க.ஸ்டாலின்!