ETV Bharat / state

மயானங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்: ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்!

மயானங்கள் அனைத்தும் சுத்தமாக, பசுமையாக இருக்க வேண்டும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 22, 2023, 4:51 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மயானங்கள் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும் எனவும் பசுமை மயானங்களாக இருக்க வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளார்.

அவர் அனுப்பிய கடிதத்தில், "உயிரிழந்த மக்களை சிரமத்திற்கு ஆளாக்காத வகையில், தூய்மையாகவும், நேர்த்தியாகவும், புதைகுழிகள் மற்றும் சுடுகாடுகளை அமைக்க அரசு ஆர்வமாக உள்ளது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

சுடுகாடுகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு, எந்த பிரச்னையும் இல்லை என்பதை உறுதித்திப்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். ஆனால், பல இடங்களில் உள்ள மயானம் மற்றும் சுடுகாடுகள் முறையாக பராமரிக்கப்படாமல், அடிப்படை வசதிகள் கூட இல்லை. குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் நடைபெறும் நகர்ப்புறங்களில் சுற்றுச்சுவர் அமைத்து, பூச்செடிகள் மற்றும் மரங்களை நடுவதன் மூலம், மக்களுக்கு தண்ணீர் வசதி மற்றும் கொட்டகை அமைத்து 'பசுமை புதை குழிகளை' உருவாக்கலாம் எனவும் ஆட்சியர்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.

மேலும், இந்த வசதிகளை வழங்க உங்கள் பகுதியில் உள்ள சேவை நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் துறையின் சேவையையும் நீங்கள் பயன்படுத்தலா. இது நிச்சயமாக புதைகுழிகள் மற்றும் எரியும் இடங்களில் ஒட்டுமொத்த சூழலை மேம்படுத்தும் மற்றும் இறந்த ஆத்மாக்களுடன் வரும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும்.

உங்கள் மாவட்டத்தில் இது போன்ற ஒரு சிறந்த புதை குழியை நீங்கள் உருவாக்கலாம் மற்றும் அதைப் பிரதிபலிக்க மற்றவர்களை ஊக்குவிக்கலாம். மேலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட இரண்டின் பிம்பத்தையும் மேம்படுத்த இது பெரிதும் உதவும். எனவே இதற்கு தேவையானதை தயவு செய்து செய்யுங்கள்" என கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான சுகாதார வளாகம் இல்லாததால் திறந்தவெளியை பயன்படுத்தும் அவலம் உள்ளது. மயானத்தில் தண்ணீர், மின் விளக்கு, போன்ற அடிப்படை வசதி இல்லாததால் இறந்தவர்களை அடக்கம் செய்ய வருபவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் மயானத்தில் சுற்றுச்சுவர், குளியல் தொட்டி எதுவுமே இல்லாததால் மக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக அதனை பயன்படுத்தி வருகின்றனர் உள்ளிட்ட பல புகார்கள் அடிக்கடி வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கடை மூடியது தெரியாமல் மது வாங்க வந்த நபர் - இனிப்பு வழங்கி அனுப்பி வைத்த DYFI

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.