சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதில், ஆவடி மாநகர ஆணையராக அருண், திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாக ஆல்பர்ட் ஜான், சென்னை பூக்கடை துணை ஆணையராக ஸ்ரேயா குப்தா, நாகை மாவட்ட எஸ்பியாக ஹர்ஸ் சிங், சென்னை மாநகர நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக சீனிவாசன், ஈரோடு மாவட்ட எஸ்பியாக ஜவகர் மற்றும் க்யூ பிரிவு எஸ்பியாக சசிமோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்பி சரவணன், சென்னை போக்குவரத்து வடக்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதேநேரம், நாமக்கல் மாவட்ட எஸ்பியாக ராஜேஷ் கண்ணன், மாநில குற்ற ஆவண காப்பக எஸ்பியாக கலைச்செல்வன், வேலூர் எஸ்பியாக மணிவண்ணன், செங்கல்பட்டு எஸ்பியாக சாய் பிரனீத், மதுரை தெற்கு துணை ஆணையராக காத்திருப்போர் பட்டியலில் இருந்த பிரதீப் ஆகியோரை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
மேலும், சிபிசிஐடி சைபர் பிரிவு எஸ்பியாக ஸ்ரீதேவி, திருச்சி தெற்கு துணை ஆணையராக எஸ்பி செல்வகுமார், ஆவடி செங்குன்றம் துணை ஆணையராக பாலகிருஷ்ணன், பாதுகாப்பு பிரிவு எஸ்பியாக ராஜேந்திரன், திருப்பூர் மாவட்ட எஸ்பியாக சாமிநாதன், விழுப்புரம் மாவட்ட எஸ்பியாக சஷாங் சாய், கமண்டோ பிரிவு எஸ்பியாக அருண் பாலகோபாலன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில உளவுத்துறை எஸ்பி சரவணனுக்கு ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு எஸ்பியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநில காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்பி தீபா சத்தியன், தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை கூடுதல் எஸ்பி சரவண குமாருக்கு ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு எஸ்பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் கூடுதல் எஸ்பி வினோத் சாந்தாராமுக்கு சிபிசிஐடி சிறப்பு பிரிவு எஸ்பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகர கூடுதல் ஆணையர் காமினி, குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். ஆயுதப்படை ஐஜி ராதிகா, அமலாக்கப்பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர கூடுதல் ஆணையர் அன்பு, சிபிசிஐடி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர தலைமையிட கூடுதல் ஆணையர் லோகநாதன் சென்னை வடக்கு கூடுதல் ஆணையராக பணி அமர்த்தப்பட்டு உள்ளார். ஆவடி மாநகர கூடுதல் ஆணையர் நஜ்மல் ஹோடா தலைமையிட நலப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கப் பிரிவு ஐஜி ரூபேஷ்குமார் மீனா, சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதேபோல், ஏடிஜிபியாக இருந்த ராஜீவ் குமாருக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. ஆவடி காவல் ஆணையராக இருந்த சந்திப் ராய் ரத்தோர், காவல் பயிற்சி அகடாமி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஏடிஜிபியாக இருந்த அபய் குமார் சிங், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஜிபியாக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மின்சார வாரிய ஊழல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக இருந்த வன்னிய பெருமாள், அதன் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இதையும் படிங்க: ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடம் மாற்றம் - தமிழக அரசு அரசாணை