ETV Bharat / state

11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் புதிய பாடம் அறிமுகம்! - Vocational subjects taught in Government Higher Secondary Schools

தமிழ்நாடு மாநிலப்பாடத்திட்டத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு திறன்கள் என்ற புதிய பாடம் நடப்புக்கல்வி ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 11, 12 ம் தொழிற்கல்வியில் புதிய பாடம் அறிமுகம்..!

author img

By

Published : Aug 2, 2022, 10:38 PM IST

சென்னை: தமிழ்நாடு மாநிலப்பாடத்திட்டத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புத்திறன்கள் என்ற புதிய பாடம் நடப்புக்கல்வி ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் வேலைவாய்ப்புத்திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டு, தொழிற்கல்விப்பிரிவில் கம்பியூட்டர் தொழில்நுட்பம் மற்றும் கம்பியூட்டர் பயன்பாடுகள் என்ற பாடத்திற்கு மாற்றாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு மாநிலப்பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்க வேண்டும் என்பதற்காக 2019ஆம் ஆண்டு பாடத்திட்டங்களை உருவாக்குவதற்கான உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டு தற்போதுள்ள பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.

இந்நிலையில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு மேலும் வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் வகையில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் தொழிற்கல்வி பாடங்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் உறுதுணையோடு மேம்படுத்தப்படும் எனவும், இதனால் மாணவர்கள் தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு ஏற்ப திறனைப் பெற்று உடனடியாக வேலைவாய்ப்பினை பெறுவோர் என 2021-22ஆம் கல்வி ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில், ’தொழிற்கல்வி பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை சீரமைக்க உயர்மட்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்த வல்லுநர் குழு மாணவர்களின் வேலைவாய்ப்புத்திறனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்துடன் இணைந்து தொழிற்கல்வியில் உள்ள 12 பாடப்பிரிவுகளில் எட்டு பாடப்பிரிவுகளில் உள்ள பாடநூல்களை மறு சீரமைக்க பரிந்துரைத்திருந்தது.

அடிப்படை இயந்திரவியல், அடிப்படை மின் பொறியியல், அடிப்படை மின்னணு பொறியியல், நெசவியலும் ஆடை வடிவமைப்பும், நர்சிங், வேளாண்மை அறிவியல், அலுவலக மேலாண்மையும் செயலியலும் தட்டச்சுக்கணினி பயன்பாடுகளும், கணக்குப்பதிவியிலும் தணிக்கையிலும் ஆகிய எட்டு பாடப்பிரிவுகளை பாடநூல் வல்லுநர்கள் ஆய்வு செய்து தற்பொழுது உள்ள பாடத்திட்டத்துடன் துறை சார் திறன் கழகம் பரிந்துரைத்த பாடத்திட்டத்தையும் இணைத்து மறு சீரமைப்பு செய்துள்ளனர்.

இந்த மறுசீரமைக்கப்பட்ட தொழிற்கல்வி பாடத் திட்டம் மாணவர்களின் வேலைவாய்ப்புத்திறன்களை வளப்படுத்தி மாணவர்கள் படித்து முடித்தவுடன் பல்வேறு திறன்சார்ந்த பணிகளுக்குச்செல்ல ஏதுவாக தொழிற்சாலை சார்ந்த திறன்களை முழுமையாகப்பெற்றுள்ளனர் என்ற சான்றிதழ் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அடிப்படை கட்டடப் பொறியியல், அடிப்படை தானியங்கி ஊர்தி பொறியியல், நெசவியல் தொழில்நுட்பம், உணவக மேலாண்மை பாடத்திட்டம் தற்போதைய நிலையில் தொடரும்.

அனைத்து 12 தொழில்களில் பாடப்பிரிவுகளிலும் கம்பியூட்டர் தொழில்நுட்பம் மற்றும் கம்பியூட்டர் பயன்பாடுகள் என்ற பாட நூலுக்கு மாற்றாக மாணவர்களின் வேலை வாய்ப்புத்திறன்களை மேம்படுத்தும் வகையில் 20,22,23ஆம் கல்வி ஆண்டு முதல் வேலைவாய்ப்புத்திறன்கள் என்ற புதிய பாடம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தொழிற்கல்வி பாடப்பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்புத்திறன்கள் என்ற பாடநூலினை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் மூலம் வரும் நாட்களில் ஆன்லைன் மூலமாகப்பயிற்சி வழங்கப்படும். மேலும் வேலைவாய்ப்புத்திறன்கள் பாடத்தினை tnschools.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'உஷார்..' உயரும் மேட்டூர் அணை;காவிரிக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.