ETV Bharat / state

3 விதமான ரைடிங் வசதியுடன் புதிய அப்பாச்சி அறிமுகம்! - Apache RTR 200 4V

சென்னை: நகரம், மழைக்காலம், ஸ்போர்ட்ஸ் என மூன்று வித டிரைவிங் மோடுடன் கூடிய நவீன டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடலை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Introducing the new Apache with 3 different riding features

author img

By

Published : Nov 4, 2020, 4:09 PM IST

டிவிஎஸ் நிறுவனத்தின் முன்னணி மாடல் இருசக்கர வாகனமான அப்பாச்சியின் வேகம், செயல் திறன் ஆகியவற்றிக்காக இதனை இளைஞர்கள் அதிகம் விரும்புகின்றனர்.

தற்போது அப்பாச்சியின் புதிய மேம்படுத்தப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி (Apache RTR 200 4V) மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில், வாகன ஓட்டிகள் நகரத்துக்குள் சென்றால், போக்குவரத்து நெரிசல், காத்திருத்து செல்வது உள்ளிட்ட தேவைகளின் அடிப்படையில் அர்பன் மோடை (Urban Mode) தேர்வு செய்து கொள்ளலாம்.

இதில், எஞ்சின் குறைந்த அளவு திறனை மட்டுமே வெளிப்படுத்தும். ஏபிஎஸ் பிரேக்குகள் விரைவில் செயலாற்றும் வகையில் தயாராக இருக்கும்.

அதேபோல், ரெயின் மோடை (Rain Mode)-ஐ தேர்வு செய்வதன் மூலம் மழை காலத்தில் சாலையின் அமைப்பு, தன்மைக்கு ஏற்றவாரு ஏபிஎஸ் பிரேக்குகள் முன் கூட்டியே செயல்படும். ஈரமான சாலையில் வாகன ஓட்டி பைக்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.

ரேசிங் டிராக் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஸ்போர்ட் மோடு (Sport Mode)-ஐ தேர்வு செய்தால் வண்டி அதிகபட்ச செயல் திறனை வெளிப்படுத்தும். இதில், ஏபிஎஸ் பிரேக்குகள் குறைந்தபட்ச அளவே செயலாற்றும்.

அஜஸ்டபிள் சஸ்பென்ஷன் உள்ளிட்ட பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி கருப்பு, வெள்ளை மற்றும் மேட் பிளூ ஆகிய மூன்று நிறங்களில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் டெல்லி ஷோரூம் விலை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 050 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.