சென்னை: திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், கே.என்.நேரு, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். மாநிலம் முழுவதும் திமுகவின் 15-வது உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருவது குறித்தும் அடுத்த மாதம் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அதேபோல் திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து விலகிய நிலையில், துணை பொதுச்செயலாளராக அடுத்த யாரை நியமிக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.