ETV Bharat / state

கிசான் திட்ட முறைகேடு விவகாரம் : அரசின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கிசான் திட்ட முறைகேடு விவகாரம் தொடர்பாக, அத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் 1000 ஊழியர்களை பணியிடமாற்றம் செய்த அரசின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Oct 6, 2020, 2:46 PM IST

விவசாயிகளுக்கு உதவும் வகையில், நான்கு மாதங்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் என வருடத்திற்கு ஆறாயிரம் ரூபாய் நிதி உதவியை பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கி வருகிறது.

நிதி மேலாண்மை செய்து விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் வேளாண்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் அட்மா (ATMA -agriculture technic managment agency) எனப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளர்கள், உதவி மேலாளர்கள் என தமிழ்நாடு முழுவதும் 1000க்கும் மேற்பட்டோர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாத தனிநபர்களும் நிதி பெறும் வகையில் முறைகேடு நடந்திருப்பது வெளியாகி தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, அட்மா திட்டத்தின் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளர்கள், உதவி மேலாளர்கள் என 30க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்தும், பலரை பணியிடமாற்றம் செய்தும் மாநில வேளாண் துறை இயக்குனர் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு அரசு வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் சங்கர் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், வேளாண் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணியிடமாற்றம் செய்த அரசின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, இந்த வழக்கு தொடர்பாக வேளாண் துறையின் முதன்மைச் செயலர், வேளாண்துறை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.