ETV Bharat / state

இன்ஸ்டாகிராமில் இளைஞருக்கு மிரட்டல் - காவல் துறை விசாரணை - instagrame user threat on private company manager

இன்ஸ்டாகிராமில் காதலியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிடுவேன் எனக்கூறி இரண்டு லட்சம் கேட்டு மிரட்டுவதாக இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

instagrame-user-threat-on-private-company-manager

author img

By

Published : Jan 11, 2022, 4:15 PM IST

சென்னை: கோயம்பேடு திருவீதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (22). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றிவருகிறார். கடந்த 7ஆம் தேதி ராஜ்குமாரின் பிறந்தநாள் என்பதால் இன்ஸ்டாகிராமில் பலர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ராஜ்குமாருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அந்த அடையாளம் தெரியாத நபர் இரண்டு லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் எனவும், இல்லையென்றால் காதலியுடன் நெருக்கமாக இருக்கக்கூடிய புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்றும் ராஜ்குமாரை மிரட்டி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் உடனடியாக சி.எம்.பி.டி. காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்தப் புகாரின்பேரில் காவல் துறையினர் அந்த நபரின் ஐடியை வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கணினி விற்பனையாளர் வீட்டில் 11 பவுன் நகைக் கொள்ளை: பக்கத்து வீட்டுக்காரர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.