சென்னையில் கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு அறிக்கை வெளியிடப்பட்டு, அவையே பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், “நாளை (ஏப்.22) முதல் புகாரளிக்க மனித உரிமைகள் ஆணையத்தின் நுழைவு வாயிலில் புகார் பெட்டிகள் வைக்கப்படும். அதில் காலை 10 மணி முதல் மாலை 3 மணிக்குள் புகார் மனுவை சமர்ப்பிக்க வேண்டும்.
முன் அனுமதியின்றி ஆணைய அலுவலகத்திற்குள் யாருக்கும் அனுமதி இல்லை. அனுமதி தேவை என்றால் இரண்டு நாட்களுக்கு முன்னதாக மனுதாரர்கள் விண்ணப்பித்து உரிய அனுமதி பெற வேண்டும்.
முன் அனுமதி பெற்றவர்கள் முகக்கவசம் அணிவது, கரோனா தடுப்பு விதிகள் ஆகியவற்றை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். முடிந்தவரை புகார்களை ஆன்லைன் மூலமே அனுப்ப வேண்டும். ஆணையம் பெறும் மனுக்கள் நாளை (ஏப்.22) முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விசாரிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : விரைவில் சில்லறை வர்த்தகத்தில் கோவிஷீல்டு