சென்னை: தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 23ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது.
![முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12818672_2.jpg)
பள்ளிகள் திறப்பு
நாளை நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில், 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பதற்கான உறுதியான தகவல் வெளியாக வாய்ப்புள்ளது.
![முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12818672_1.jpg)
பல்வேறு அறிவிப்பு
மேலும் தமிழ்நாட்டில் 50 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்கை திறப்பு தொடர்பான அறிவிப்பும் நாளை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கொடநாடு வழக்கை திசை திருப்புகிறார்கள் - எடப்பாடி பழனிசாமி