ETV Bharat / state

மருத்துவர்கள் அலட்சியத்தால் சிசு இறப்பு - பாதிக்கப்பட்டவர் புகார்

author img

By

Published : Jun 24, 2022, 10:36 PM IST

அயனாவரம் அரசு மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் தனது குழந்தை இறந்துவிட்டதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.

மருத்துவர்கள் அலட்சியத்தால் சிசு இறப்பு
மருத்துவர்கள் அலட்சியத்தால் சிசு இறப்பு

சென்னை: வில்லிவாக்கம் பாரதி நகரைச்சேர்ந்தவர் சுரேஷ் (37). ஆட்டோ ஓட்டுநரான இவருக்குத் திருமணமாகி அஷ்டலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அஷ்டலட்சுமிக்கு நேற்று (ஜூன் 23) பிரசவ வலி ஏற்பட்டதால், அயனாவரம் மகப்பேறு அரசு மருத்துவமனைக்கு சுரேஷ் அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோது, பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் இன்று (ஜூன் 24) அஷ்டலட்சுமியின் கணவர் சுரேஷ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ், 'தனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு பனிக்குடம் உடைந்தவுடன் 15 நிமிடத்திற்குள் அயனாவரம் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றதாக தெரிவித்தார். அப்போது உடனடியாக மருத்துவர்களிடம் ஆப்ரேஷன் செய்து பிரசவம் பார்க்குமாறு தெரிவித்த போது, சுகப்பிரசவம் பார்ப்பதாகக் கூறி சுமார் 2 மணி நேரம் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் உடனடியாக மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுமாறு தெரிவித்ததால், அங்கு அழைத்து சென்றபோது குழந்தை இறந்துவிட்டதாகவும், உடனடியாக தனது மனைவிக்கு கர்ப்பப்பையை நீக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து தனது மனைவிக்கு ஆப்ரேஷன் செய்து இறந்த குழந்தையை எடுத்து, கர்ப்பப்பையை நீக்கியதால், தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக' சுரேஷ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் அலட்சியத்தால் சிசு இறப்பு

அயனாவரம் அரசு மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் தனது குழந்தை இறந்துவிட்டதாகவும், வாரிசு இல்லாமல் தற்போது கிடப்பதாக' தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோர் உரிய நீதி பெற்று தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க: என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள் - காவல் ஆணையர் அலுவலகத்தில் மதுவந்தி புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.