சென்னை: தமிழ்நாட்டின் தொழில் வளத்தைப் பெருக்குவது குறித்தும், தொழில் தொடங்க உகந்த மாநிலமாக மாநிலத்தை மாற்ற என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்தும், தொழில்துறை அலுவலர்களுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று(மே.10) ஆலோசனை நடத்தினார்.
கூட்டம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், முதலீடுகளை ஈர்ப்பது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவது, புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவது, வேலை வாய்ப்பை அதிகரிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தான் அதிகமான தொழிற்சாலை உள்ளது. எனவே தொழில் வளம் பெருகும் போது வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்" என்றார்.
இதையும் படிங்க: அதிமுக எம்.பி.க்கள் இருவர் ராஜினாமா