ETV Bharat / state

இந்திய மகளிர் கபாடி அணியின் பயிற்சியாளருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு! - Chennai airport

Indian Women's Kabaddi Team: ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய மகளிர் கபாடி அணியின் பயிற்சியாளருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Indian Women's Kabaddi Team
இந்திய மகளிர் கபாடி அணியின் பயிற்சியாளருக்கு சென்னை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2023, 1:51 PM IST

இந்திய மகளிர் கபாடி அணி பயிற்சியாளர் பேட்டி

சென்னை: சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய மகளிர் கபாடி அணியின் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சியாளர் கவிதா செல்வராஜ், இன்று (அக்.15) அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் கபாடி வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர் மற்றும் கபாடி பயிற்சியாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோர், கவிதா செல்வராஜ்-க்கு பூங்கொத்து கொடுத்து மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். பின், செய்தியாளர்களைச் சந்தித்த கவிதா செல்வராஜ் கூறுகையில், ‘சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபாடி அணியின் பயிற்சியாளராக இருந்து பெரும் பங்காற்றி உள்ளேன்.

தங்கப்பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் ஏற்கனவே இந்திய மகளிர் கபாடி அணியில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக கேப்டனாக இருந்து, தங்கப்பதக்கங்களை வென்று உள்ளேன். இதனால் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமையை சேர்த்து உள்ளேன்.

தற்போது மீண்டும் இந்திய மகளிர் கபாடி அணியின் பயிற்சியாளராக சென்று, தங்கப்பதக்கத்தை வென்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய கபாடி ஆண்கள் மற்றும் பெண்கள் அணியில் தமிழகத்தைச் சார்ந்த ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது.

அடுத்த முறை தமிழகத்தில் இருந்து அதிகமானோர் வர வேண்டும். அதற்காக நான் பாடுபடுவேன். இதுவரை தமிழகத்தில் இருந்து இந்திய மகளிர் கபாடி அணிக்கு பயிற்சியாளராக யாரும் செல்லவில்லை. நானே முதல் ஆளாக சென்று உள்ளேன். தமிழக அரசு உதவினால் தமிழகத்திலிருந்து அதிகப்படியான வீரர், வீராங்கனைகளை உருவாக்க உதவியாக இருக்கும். இந்திய அளவில் விளையாடி, பதக்கங்களை வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு அரசுத் துறையில் வேலைகளை வழங்க வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க:தஞ்சாவூர் மாநகராட்சியில் மக்களுக்கு விழிப்புணர்வு கடிதம் மூலம் டெங்கு தடுப்பு பணிகள் தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.