ETV Bharat / state

இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியால் விழாக் கோலம் பூண்ட சென்னை!

India Vs Australia Chennai Match: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெறும் இந்தியா - ஆஸ்திரேலியா உலகக்கோப்பை தொடருக்கான லீக் போட்டியைக் காண இந்திய முழுவதும் உள்ள ரசிகர்கள் சென்னை நோக்கி வந்துள்ளதால் விழாக் கோலமாகக் காட்சியளித்தது.

India Australia League Match
இந்தியா-ஆஸ்திரேலியா லீக் போட்டி- விழாக் கோலம் பூண்ட சென்னை தலைநகரம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 3:05 PM IST

இந்தியா-ஆஸ்திரேலியா லீக் போட்டி- விழாக் கோலம் பூண்ட சென்னை தலைநகரம்

சென்னை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று (அக்.8) பிற்பகல் 2 மணிக்குச் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான இந்திய அணி, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.

மேலும், 1983 மற்றும் 2011-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் இந்த 2023 உலகக் கோப்பைக்கும் களமிறங்கி இருக்கிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தை ஆஸ்திரேலியா அணியுடன் சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (அக்.8) பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி இருக்கிறது. போட்டியை காண வெளிமாநிலங்களில் இருந்து ரசிகர்கள் அனைவரும் சென்னைக்குப் படை எடுத்துள்ள நிலையில் சென்னையே விழாக்கோலமாக இருந்து வருகிறது.

விண்ணை மூட்டும் 'இந்தியா' கோஷம்: இந்த போட்டிக்காகக் காலை முதலே ரசிகர்களின் படை, சேப்பாக்கம் மைதானத்தை நோக்கி வருகை தந்தது. அங்கு கூடிய ரசிகர்களின், விசில் சத்தமும் "இந்தியா.. இந்தியா.." என்ற கோஷமும் விண்ணை முட்டியது. மேலும் முகத்தில் இந்தியக் கொடி ஓவியத்தை வரைந்து, தேசியக் கொடியைக் கையில் ஏந்தியும் வருகை தந்தனர். மேலும் ரசிகர்கள் நீண்ட நேரம் கழித்து மதியம் 12.30 மணி அளவில் அனைவரும் சேப்பாக்கம் மைதானத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து ரசிகர்கள் தெரிவிக்கையில், "இந்த உலகக் கோப்பை போட்டிக்காக காலை முதலே காத்துக் கொண்டிருக்கிறோம், மேலும் இந்த போட்டியில், இந்தியா வெல்ல வேண்டும் என்றும் விராத் கோலி சதம் அடிக்க வேண்டும் என்றும் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்" என்று தெரிவித்தனர்.

இது குறித்து விருதுநகரைச் சேர்ந்த ஆஸ்திரேலியா அணி ரசிகர் ஒருவர் கூறுகையில், "ஆஸ்திரேலியா அணி இந்த முறை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மிடில் ஓவர்களில் இந்திய அணிக்குச் சற்று சவளாக இருந்தாலும், அந்த ஆட்டத்தில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், மார்னஷ் லபுஷேன், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருந்தனர் இதனால் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது" என்று தெரிவித்தார்.

போலீஸ் பாதுகாப்பு: சென்னையில் நடைபெறுவதை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றிலும் சுமார் 2,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து டிரோன் மூலமாகவும், ட்ரைபாட் கண்காணிப்பு கமேரா மூலமாகவும் பாதுகாப்புப் பணியில் ஈட்டுப்பட்டு வருகின்றனர்.

தூய்மை பணியாளர்கள்: பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், மைதானத்தைச் சுற்றி தூய்மை பணியில் ஈட்டுப்பட்டு வருகின்றனர். 30,000 ரசிகர்கள் வருவதால், இப்பகுதியைத் தூய்மையாகக் கையாளுவதில் மாநகராட்சி தீவிரம் காண்பித்து வருகிறது.

இதையும் படிங்க: India Vs Australia : இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்! வெற்றி யாருக்கு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.